×
 

இனியும் தீவிரவாதம் தொடர்ந்தால்.. பாகிஸ்தானுக்கு ஜெய்சங்கர் பகிரங்க எச்சரிக்கை..!

இந்தியாவைப் பொறுத்தவரை ஜம்மு-காஷ்மீர் பிரச்னை என்பது வேறு, பயங்கரவாத பிரச்னைகள் என்பது வேறு. பயங்கரவாதம் முற்றிலும் ஏற்க முடியாத ஒரு சர்வதேச குற்றம். அதை நியாப்படுத்தவோ மன்னிக்கவோ கூடாது.

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆறு நாட்கள் அரசுமுறை பயணமாக ஐரோப்பிய நாடுகளுக்கு சென்றுள்ளார். இதன் ஒரு பகுதியாக நெதர்லாந்து சென்ற மத்திய வெளியுறவு அமைச்சர் அந்நாட்டு பத்திரிகைக்கு பேட்டி அளித்த்தார். அப்போது அவர் கூறியிருப்பதாவது;   பயங்கரவாதத்துக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை தேவையானது. பாராட்டுக்கு உரியது.  பயங்கரவாதத்துக்கு உறுதியான ஒரு முடிவு கிடைக்கவேண்டும் என்றுதான் இந்தியா விரும்புகிறது.  பயங்கரவாத தாக்குதல்களில் பாகிஸ்தான் ஈடுபடவில்லை என நடிக்க கூடாது.  

பயங்கரவாத தாக்குதல்கள் குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது என பாகிஸ்தான் சொல்லும் கதைகளை எல்லாம் உலகம் நம்பவும் கூடாது. ஐநா சபையால் தடை செய்யப்பட்ட மிக பிரபலமான பயங்கரவாதிகள் அனைவருமே பாகிஸ்தானில் உள்ளனர். அவர்கள் பெரிய நகரங்களில் இருந்துகொண்டு பட்டப் பகலில் செயல்படுகின்றனர்.  அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்பது நன்றாக தெரியும். அவர்களுக்கும் பாகிஸ்தான் அரசுக்கும் உள்ள தொடர்புகளும் தெரியும். எனவே பாகிஸ்தான் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை என பாசாங்கு செய்யக்கூடாது. 

இதையும் படிங்க: தீவிரவாதிகளை சும்மா விடவே கூடாது! பயங்கரவாத ஒழிப்பு போரில் இந்தியாவுக்கு ஜப்பான் ஆதரவு..!

கடந்த மே 10ல் மேற்கொள்ளப்பட்ட சண்டை நிறுத்தம் இரு நாடுகளும் எடுத்த ராணுவ நடவடிக்கைகளுக்கு தற்காலிக முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது. பாகிஸ்தானில் இருந்து தொடர்ந்து பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்ந்தால் அதற்குரிய விளைவுகள் ஏற்படும். பாகிஸ்தானியர்கள் அதை நன்றாக புரிந்துகொள்ள வேண்டும். இந்தியாவைப் பொறுத்தவரை ஜம்மு-காஷ்மீர் பிரச்னை என்பது வேறு, பயங்கரவாத பிரச்னைகள் என்பது வேறு.  பயங்கரவாதம் முற்றிலும் ஏற்க முடியாத ஒரு சர்வதேச குற்றம்.  அதை நியாப்படுத்தவோ மன்னிக்கவோ கூடாது.

கடந்த ஏப்ரல் 22ம் தேதி பயங்கரவாதிகள் ஜம்மு-காஷ்மீரின் துடிப்பு மிக்க சுற்றுலா துறையை குறிவைத்து தாக்குதல் நடத்தினர்.  அதற்கு மத சாயத்தையும் பூசினர்.  உலகம் அது போன்ற செயல்களை ஒருபோதும் ஏற்க கூடாது. 1947ல் இந்தியாவும், பாகிஸ்தானும் பிரிந்த போது ஜம்மு-காஷ்மீர் இந்தியாவுடன் சேர்ந்தது.  ஜம்மு-காஷ்மீரின் பகுதிகளை சட்ட விரோதமாக ஆக்கிரமித்தவர்கள், ஆக்கிரமித்த இடங்களை அதனுடைய உரிமையாளரிடம் திருப்பித் தர வேண்டும். அந்த நிலைப்பாட்டில் இந்தியா உறுதியாக இருக்கிறது.

ஜம்மு-காஷ்மீர் பிரச்னையில் மூன்றாவது நபர் தலையிடுவதை இந்தியா ஏற்காது.  அது குறித்து பாகிஸ்தானுடன் மட்டும்தான் பேசுவோம். ஆபரேஷன் சிந்தூர் என்பது நீதியின் புதிய வடிவம். பயங்கரவாதத்துக்கு இந்தியா புதிய வடிவில் பதில் அளிக்கும் என மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: Operation Trashi.! 2 பயங்கரவாதிகள் நாக்அவுட்.. இதோடு 8 விக்கெட் காலி.. வேட்டையாடும் இந்திய ராணுவம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share