சொந்த மாவட்டத்திலேயே இப்படியா? - “சாலையில் வீசிச்சென்ற அதிமுக தொண்டர்கள்” - காலையிலேயே இபிஎஸ் காதுகளை எட்டிய ஷாக்கிங் நியூஸ்...!
சேலம் அரிசிபாளையம் அருகே நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுக உறுப்பினர் அட்டைகள் சாலையில் கிடந்ததால் பரபரப்பு
அதிமுகவில் செங்கோட்டையனால் வெடித்துள்ள உட்கட்சி பூசல் அடுத்தடுத்து உச்சக்கட்டத்தை எட்டி வருகிறது. ஏற்கனவே ஓபிஎஸ், வி.கே.சசிகலா, டிடிவி தினகரனுக்கு ஆதரவாகவும், அவர்களுக்கு துரோகம் இழைந்தததாகவும் தென் மாவட்ட மக்கள் எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் இருப்பதாகக்கூறப்படுகிறது.
வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலை ஒட்டி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். 'மக்களை காப்போம், தமிழகம் மீட்போம்' என்ற பிரசார பயணத்தை கடந்த மாதம் 7-ந்தேதி தொடங்கினார். அப்போது தென் மாவட்டங்களில் குறிப்பிட்ட சமூகத்தினர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போஸ்டர்களை ஒட்டியிருந்தனர்.
அதேபோல கொங்கு மண்டலத்திலும் செங்கோட்டையனுக்கு ஆதரவாக போஸ்டர்களை ஒட்டுவது, எடப்பாடி சுற்றுப்பயணத்தின் போது ஒருங்கிணைந்த அதிமுக வேண்டும் என முழக்கங்களை எழுப்புவது என அதிமுக தொண்டர்கள் ஆவேசமடைந்து வருகின்றனர். இந்நிலையில், எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டத்திலேயே அதிமுகவினர் உறுப்பினர் அட்டையை சாலையில் வீசி சென்றுள்ளனர்.
இதையும் படிங்க: அரசு காரில் போய் சொகுசு காரில் வந்தீங்களே! என்ன இபிஎஸ் இதெல்லாம்? விளாசிய திமுக
சேலம் மாநகர், அரிசிப்பாளையம் பகுதியில் சத்திரம் மேம்பாலம் அருகே இன்று காலையில் ஏராளமான அதிமுக உறுப்பினர் அட்டைகள் சாலையில் கொட்டி கிடந்தன. எடப்பாடி பழனிச்சாமியின் சொந்த மாவட்டத்திலேயே அதிமுகவினர் தங்களது உறுப்பினர் அட்டைகளை சாலையில் பேசி சென்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக முக்கிய நிர்வாகிகள் போர்க்கொடி தூக்கி வரும் நிலையில் உறுப்பினர்களும் அக்கட்சியில் இருந்து வெளியேறி வருகின்றனர் இந்த நிலையில் நூற்றுக்கு மேற்பட்ட உறுப்பினர்கள் தங்களது உறுப்பினர் அட்டையை சாலையில் வீசி சென்று உள்ளனர்.
குறிப்பாக பாஜகவுடன் கூட்டணி, அதிமுகவில் அமித்ஷா தலையீடு போன்ற நடவடிக்கையின் காரணமாக அதிமுக நிர்வாகிகளும் தொண்டர்களும் அதிருப்தியில் உள்ளனர். இதனால் கட்சியின் தலைமையை பிடிக்காமல் , அதிமுக உண்மை தொண்டர்கள் , கோபத்தில் வீசி சென்று இருக்கலாம் என கூறப்படுகிறது.
இதையும் படிங்க: ஆமா 10 நிமிஷம் தனியா பேசினேன்! மூஞ்சை மறைக்க அவசியம் இல்ல... இபிஎஸ் பரபரப்பு பேட்டி