×
 
☰

நகை மதிப்பீட்டாளரை செருப்பால் அடித்த அதிமுக பிரமுகர் கைது... நடந்தது என்ன?

சங்கரன்கோவில் அருகே கூட்டுறவு வங்கி நகை மதிப்பீட்டாளரை காலணியால் தாக்கிய அதிமுக பிரமுகர் கைது.

தென்காசி மாவட்ட சங்கரன்கோவில் அருகே உள்ள கீழநீலிதநல்லூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் நகை மதிப்பீட்டராளாக பணியாற்றி வருபவர் பாலசுப்பிரமணியன் (54 ).  நேற்று மதியம் அலுவலகத்தில் வேலையில் இருந்து கொண்டிருந்தபோது அங்கு வந்த அதேப் பகுதியைச் சேர்ந்த திருமலைசாமி என்பவர் தகராறில் ஈடுபட்டுள்ளார். 

திருமலைச்சாமியின் வீட்டிற்கு பைப் லைன் போடாததற்கு பாலசுப்பிரமணியம் தான் காரணம் என்று கூறி தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அப்போது தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் இருந்து வெளியே வந்து வாசலில் நின்று இருவருக்கும் நடந்த வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 அப்போது வாக்குவாதம் முற்றி திருமலைசாமி காலில் அணிந்திருந்த செருப்பைக் கழற்றி பாலசுப்பிரமணியனை தாக்கியுள்ளார். இதனையடுத்து பாலசுப்பிரமணியம் பனவடலிசத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததையடுத்து திருமலைசாமியை கைது செய்த பனவடலிசத்திரம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: தவெகவுக்கு மரண பயத்தை காட்டிய தேர்தல்! எடப்பாடி பழனிசாமி ஆவேசம்!

திருமலைச்சாமி அதிமுக பிரமுகராக இருப்பது குறிப்பிடத்தக்கது. நகை மதிப்பீட்டாளரை கூட்டுறவு சங்க அலுவலக வாசலில் வைத்து காலணியால் அடித்த நிகழ்வு அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகிய காட்சிகள் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: சீல் இல்லாத EVM மெஷின்... டிபன் பாக்ஸில் பணம்..! ஜனநாயகம் எப்படி வெல்லும்.? அதிமுக இன்பதுரை அதிருப்தி.!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share