பெரும் சோகம்… சவுதியில் 42 இந்தியர்கள் உடல் கருகி உயிரிழப்பு… பிரதமர் மோடி இரங்கல்..!
சவுதியில் ஏற்பட்ட பேருந்து தீவிபத்தில் உயிரிழந்த இந்தியர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
ஹைதராபாத்தில் இருந்து மக்காவுக்கு புனித பயணம் சென்ற பயணிகளின் பேருந்து மீது டீசல் ஆரி மோதி தீப்பிடித்து பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. சவுதி அரேபியாவில் நிகழ்ந்த இந்த விபத்தில் சிக்கி 42 இந்தியர்கள் உயிரிழந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. சவுதியில் பேருந்தும் டீசல் ஆரியம் மோதி தீப்பிடித்து விபத்தில் 42 இந்தியர்கள் பலியாகி இருப்பதாக கூறப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.
மெக்காவிலிருந்து மதினாவுக்கு பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. நள்ளிரவு ஒரு மணி அளவில் விபத்து நிகழ்ந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகி இருக்கிறது. மக்கா மற்றும் மதினா புனித பயணம், இஸ்லாமிய மார்க்கத்தின் மிக முக்கியமான ஆன்மீகப் பயணமாகும். இது ஹஜ் மற்றும் உம்ரா என்ற இரு வகையான புனிதப் பயணங்களை உள்ளடக்கியது.
ஹஜ் என்பது இஸ்லாமின் ஐந்து தூண்களில் ஒன்றாகும், இது ஒவ்வொரு முஸ்லிமும் தனது வாழ்நாளில் ஒரு முறையாவது மேற்கொள்ள வேண்டிய கடமை. இந்த புனித பயணத்திற்கு சென்ற போது இந்தியர்கள் விபத்தில் சிக்கி இறந்ததாக கூறப்பட்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: நிச்சயம் நீதி கிடைக்கும்... கார் வெடி விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறிய பிரதமர் சூளுரை...!
மதீனாவில் இந்தியர்கள் விபத்தில் சிக்கிய சம்பவம் அறிந்து மிகுந்த வருத்தம் அடைந்ததாக பிரதமர் மோடி தெரிவித்தார். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பத்தினருடன் தன் எண்ணங்கள் உள்ளதாகவும், காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் என்றும் கூறினார். ரியாத்தில் உள்ள எங்கள் தூதரகம் மற்றும் ஜெட்டாவில் உள்ள துணைத் தூதரகம் அனைத்து உதவிகளையும் வழங்கி வருகின்றன என்றும் தங்கள் அதிகாரிகள் சவுதி அரேபிய அதிகாரிகளுடனும் நெருங்கிய தொடர்பில் உள்ளனர் எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: குண்டு வெடிப்பு பயங்கரம்..! சதிகாரர்கள் தண்டிக்கப்படுவது உறுதி... பிரதமர் மோடி திட்டவட்டம்...!