×
 

கடலுக்குள் 20,000 அடி ஆழத்தில் காத்திருந்த மர்ம முட்டைகள்.. ஷாக் கொடுத்த ஆராய்ச்சியாளர்கள்...!

பசிபிக் பெருங்கடலில் 6,200 மீட்டர் (சுமார் 20,341 அடி) ஆழத்தில் இந்த முட்டைகளை கண்டுபிடித்து உள்ளது. 

கடல் நமது கற்பனைக்கு எட்டாத மர்மங்களை மட்டுமல்ல, ஆராய்ச்சியாளர்கள், விஞ்ஞானிகளால் கூட கண்டறிய முடியாத அளவிற்கு மர்மங்களை தன்னுள் கொண்டுள்ளது. அப்படிப்பட்ட மர்மம் ஒன்றை தான் சுமார் 20,000 ஆயிரம் அடி கடலுக்குள் இருந்து ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். 

ஜப்பானில் உள்ள டோக்கியோ பல்கலைக்கழகம் மற்றும் ஹொக்கைடோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் குழு, ரிமோட் மூலம் இயக்கப்படும் வாகனம் மூலம் கடல் தளத்தை ஆராய்ந்தபோது, ​​பசிபிக் பெருங்கடலில் 6,200 மீட்டர் (சுமார் 20,341 அடி) ஆழத்தில் இந்த முட்டைகளை கண்டுபிடித்து உள்ளது. 

பார்ப்பதற்கு அச்சுறுத்தும் தோற்றமுடைய மற்றும் கருப்பு நிறத்தில் காணப்படும் இந்த முட்டைகள், கடல் தளத்தின் ஆழமான பகுதியான 'அபிசோபெலஜிக் மண்டலம்' என்று அழைக்கப்படும் இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. டோக்கியோ பல்கலைக்கழகத்தின் கடல் ஆராய்ச்சியாளரான யசுனோரி கானோ, முட்டைகளை மேற்பரப்புக்கு கொண்டு வந்து ஆய்வு செய்ய முடிவு செய்தார், ஆனால் எதிர்பாராத விதமாக பல முட்டைகள் உடைந்திருந்ததாலும் மற்றும் மோசமாக சேதமடைந்திருந்ததாலும் அவற்றில் நான்கு முட்டைகளை மட்டுமே மீட்க முடிந்தது.

இதையும் படிங்க: ஆயிரம், ஆயிரம் கோடிகளுக்கு ஊழல்... சபரீசனா? உதயநிதியா? குழப்பம்; திமுகவை மிரளவைத்த அமித் ஷா...! 

இந்த முட்டைகள் தட்டையான புழுக்களின் கூடுகள் என்றும், புழுக்கள் இப்படி முட்டையிட்டு தாங்கள் பார்த்ததில்லை என்றும் விஞ்ஞானிகள் மிரட்டியுடன் தெரிவித்துள்ளனர். முட்டையை வெட்டி திறந்தபோது, ​​அதன் உள்ளே பால் போன்ற வெள்ளை நிற திரவப் பொருள் ஒன்று முட்டையிலிருந்து கசிந்ததாக கூறப்படுகிறது. உள்ளே, ஒரு ஓட்டில் சிறிய வெள்ளை உடல்கள் பொதிந்திருப்பதைக் கண்டறிந்தனர்,

இது பிளாட்டிஹெல்மின்த்ஸ் என்ற தட்டையான புழுக்களைக் கொண்ட கூடு என்பதை அதை வைத்தே விஞ்ஞானிகள் உறுதி செய்துள்ளனர். இந்த ஆய்வு, கடல்களுக்கு அடியிலும் தட்டையான புழுக்கள் போன்ற முதுகெலும்பில்லாத உயிரினங்கள் எவ்வளவு ஆழத்தில் இருக்க முடியும் என்பதற்கான வரம்புகளை உயர்த்தியுள்ளது.

இதையும் படிங்க: பாலியல் ஆசைக்கு இணங்க மறுத்த நந்தினி... ஆபாச பேசி மிரட்டல் விடுத்தல் அதிமுக பிரமுகர் கைது...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share