கொடுமை..! மாற்றுத்திறனாளிகள் மீது அடக்குமுறை... திமுகவை கண்டித்த சீமான்..!
உரிமைக்காக போராடும் மாற்றுத்திறனாளிகள் மீது அடக்கு முறையை ஏவும் போக்கை திமுக கைவிட வேண்டும் என சீமான் வலியுறுத்தினார்.
உரிமைக்காகப் போராடும் பார்வை மாற்றுத்திறனாளிகள் மீது அடக்குமுறையை ஏவும் கொடுங்கோன்மையைக் கைவிட்டு, அவர்களின் நியாயமான கோரிக்கைகளை திமுக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். மாதாந்திர உதவித்தொகை உயர்வு, அரசு மற்றும் தனியார் வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு உள்ளிட்ட பார்வை மாற்றுத்திறனாளி பெருமக்களின் நீண்டநாள் கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு நிறைவேற்ற மறுப்பது மனவேதனை அளிக்கிறது என்றார்.
தங்களின் வாழ்வாதாரக் கோரிக்கைகளை வலியுறுத்தி பார்வை மாற்றுத்திறனாளிகளை வீதியில் இறங்கிப் போராடும் நிலைக்குத் தள்ளியுள்ளது வன்மையான கண்டனத்திற்குரியது என்றும் சீமான் கூறியுள்ளார். பார்வை மாற்றுத்திறனாளி சகோதர, சகோதரிகள் தங்களின் அடிப்படை உரிமைகளைக் கேட்டு அரசுக்கு பல ஆண்டுகளாகக் கோரிக்கை வைத்தும், தொடர்ச்சியாகப் போராட்டங்கள் முன்னெடுத்தும் கூட கடந்த அதிமுக அரசு கண்டுகொள்ளாமல் காலங்கடத்தியது என்று தெரிவித்தார்.
தற்போதைய திமுக அரசும் தொடர்ந்து ஏமாற்றி வருவதுடன் கடந்த ஒரு வார காலமாக உரிமை கேட்டுப் போராடிய பார்வை மாற்றுத்திறனாளிகள் மீது சிறிதும் மனசாட்சி இன்றி காவல் துறையை ஏவி, தாக்குதல் நடத்தி திமுக அரசு கைது செய்துள்ளது கொடுங்கோன்மை என்று தெரிவித்தார். கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகள் விரைந்து நிறைவேற்றப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்த நிலையில், இதுவரையில் அவர்களின் கோரிக்கைகள் ஒன்றுகூட நிறைவேற்றப்படவில்லை என்பது மாற்றுத்திறனாளி மக்களுக்குச் செய்கின்ற பச்சைத்துரோகம் என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க: அவ்ளோ அலட்சியம்…! திமுகவுக்கு ELECTION-ல இருக்கு.. குரூப் 2 விவகாரத்தால் சீமான் ஆவேசம்..!
மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகையை மாதம் ரூ.5000 மாக உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் பார்வை மாற்றுத்திறனாளி தேர்வர்களுக்கு சிறப்பு தேர்வு மூலம் அரசு வேலை வழங்க வேண்டும் எனவும். தேர்ச்சி மதிப்பெண்களாக 40% மதிப்பெண்களை நிர்ணயிக்க வேண்டும்., பட்டம் பெற்ற பார்வை மாற்றுத்திறனாளி பட்டதாரிகள் அனைவருக்கும் மடிக்கணினி வழங்க வேண்டும் எனவும் மாற்றுத்திறனாளிகளின் பல்வேறு கோரிக்கைகளை பட்டியலுக்கு சீமான் வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: சீமானுக்கு கலப்பை விவசாயி... அத்வாலேவுக்கு கரும்பு விவசாயி... சின்னம் ஒதுக்கீட்டில் சர்ப்ரைஸ்..!