×
 

பி. ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை... அரசு செய்தால் சட்டம்... சாமானியன் செய்தால் குற்றமா? சீமான் கொந்தளிப்பு...!

பி.ஆர்.பாண்டியனுக்கு 13 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டது கொடுங்கோன்மை என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

தமிழக அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழுத் தலைவராகவும், காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளராகவும் நியமிக்கப்படுகிறார் உள்ளார். 2015-ம் ஆண்டு திருவாரூர் மாவட்டத்தில் ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தி்ல் பொதுச் சொத்துகளை சேதப்படுத்தியதாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் பி.ஆர்.பாண்டியன் மற்றும் முன்னாள் பஞ்சாயத்து தலைவரான செல்வராஜ் ஆகியோருக்கு தலா 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருவாரூர் மாவட்ட அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.

 சிறை தண்டனையை எதிர்த்து பி.ஆர்.பாண்டியன், செல்வராஜ் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். விளைநிலங்களை அழித்தொழிக்கும் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்திற்கு எதிராகப் போராடியதற்காக பி.ஆர்.பாண்டியனுக்கு 13 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டது கொடுங்கோன்மை என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

ஆளும் அரசுகள் இழைக்கும் அநீதிக்கும், அடக்குமுறைக்கும் எதிராகப் போராடுவது அரசமைப்பு வழங்கியுள்ள அடிப்படை உரிமை என்றும் போராடுவதற்கு அனுமதி மறுப்பதும், வழக்குத் தொடுத்து சிறைப்படுத்துவதும் இந்த நாட்டின் அரசமைப்புக்கு எதிரானது என்றும் தெரிவித்தார். 13 ஆண்டுகள் சிறைத் தண்டனை என்பது இது மக்களாட்சி நாடுதானா என்ற ஐயத்தை எழுப்புகிறது என்றும் கடந்த 2020ஆம் ஆண்டு தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட காவிரிப்படுகையைப் பாதுகாக்க தமிழ்நாடு அரசு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து மீத்தேன், ஈத்தேன், எரிகாற்று எடுத்து விளைநிலங்களைச் சீரழிக்கத் தடைவிதித்த நிலையில், அதற்கு முன்பே, கடந்த 2015ஆம் ஆண்டே காவிரிப்படுகையைப் பாதுகாக்க ஐயா பி.ஆர்.பாண்டியன் முன்னெடுத்த போராட்டம் எப்படித் தவறானது என்றும் அரசு செய்தால் அது சட்டம்.., அதையே சாமானிய குடிமகன் செய்தால் குற்றமா என்றும் சாடினார்.

இதையும் படிங்க: பேராபத்து காத்திருக்கு..! கூடங்குளம் அணு மின் நிலையத்தில் முழு பயன்பாடு.. சீமான் எச்சரிக்கை...!

விளைநிலங்களைக் காக்கப் போராடிய ஏழு விவசாயிகள் மீது குண்டர் சட்டத்தில் சிறையிலடைத்த திமுக அரசிடம் எப்படி கருணையை எதிர்ப்பாக்க முடியும் என்றும் கேள்வி எழுப்பினார். ஓ.என்.ஜி.சி குழாய்களைச் சேதப்படுத்தியதாகச் சொல்லப்படும் குற்றத்திற்கு இத்தனை ஆண்டுகள் சிறை தண்டனை என்றால், எங்கள் முன்னோர்கள் அரும்பாடுபட்டுக் காட்டைக் கழனியாக்கி செதுக்கி சீர்படுத்தி, தலைமுறை தலைமுறையாகத் தாய்போல உணவளித்த உயிரினும் மேலான எங்கள் விளை நிலங்களை மீளவும் உருவாக்க முடியாத அளவிற்கு மீத்தேன், ஈத்தேன், ஹைட்ரோ கார்பன் என்று அழித்தொழிப்பவர்களுக்கு என்ன தண்டனை கொடுப்பது என்றும் யார் தண்டனை கொடுப்பது எனவும் கேட்டு உள்ளார். பி.ஆர்.பாண்டியனை வழக்கிலிருந்து விடுவிக்க ஓ.என்.ஜி.சி. நிறுவனம் மற்றும் நீதிமன்றம் மூலம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி உள்ளார். 

இதையும் படிங்க: நான் பேசுறத பத்தி யார் கிட்ட கேட்டீங்க? விஜயின் புதுவை விசிட் குறித்த கேள்வியால் கடுப்பான சீமான்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share