×
 

ஆரியர் ஜெயலலிதா அதிமுக தலைவர் ஆனது எப்படி? உதயநிதி காலில் விழுவது தான் சுயமரியாதையா?... வெளுத்து வாங்கிய சீமான்...!

ஆரியரான ஜெயலலிதா அதிமுகவின் தலைவர் ஆனது எப்படி என்று சீமான் கேள்வி எழுப்பினார்.

அதிமுக, திமுக ஆகிய கட்சிகளின் கோட்பாடுகளை சீமான் எப்போதும் விமர்சிப்பது உண்டு. இதற்கிடையில், சுயமரியாதை என்பதை எப்போதும் தூக்கிப் பிடிக்கும் திராவிட கட்சிகளுக்கு அடுக்கடுக்கான கேள்விகளை அவர் முன் வைத்துள்ளார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது எது சுயமரியாதை என்ற கேள்வி எழுப்பிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக விமர்சித்தார். சுயமரியாதை என்ற சொல்லை உச்சரிக்க திமுக, அதிமுகவில் உள்ளவர்களில் யாருக்காவது தகுதி இருக்கிறதா என்று கேட்டார். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காலில் அவர் வயதை ஒத்தவர் விழுவதுதான் சுயமரியாதையா என்று கேள்வி எழுப்பினார்.

திராவிட கட்சியான அதிமுகவிற்கு ஆரியரான ஜெயலலிதா தலைவர் ஆனது எப்படி என்று கேள்வி எழுப்பினார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் முன் நிமிர்ந்து நின்று அதிமுகவினர் யாராவது பேசியது உண்டா என்று சீமான் கேள்வி எழுப்பி உள்ளார். சுயமரியாதைக்காக அதிமுகவிலிருந்து வெளியேறியவர் திருநாவுக்கரசர் என்று தெரிவித்தார். ஜெயலலிதா முன்பாக எனது மாமனார் காளிமுத்து மற்றும் நிமிர்ந்து நின்று பேசுவார் என்றும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: வா...வா... சீமான்..! தோளில் கை போட்டு அழைத்து வந்த வைகோ..!

சசிகலா காலில் விழுந்து முதலமைச்சர் பதவி பெற்றதுதான் எடப்பாடி பழனிச்சாமியின் சுயமரியாதையா என்று சீமான் கேள்வி எழுப்பினார். ஜெயலலிதா காரில் செல்லும்போது கார் டயரில் விழுந்து அதிமுகவினர் கும்பிட்டது என்ன மாதிரியான சுயமரியாதை என்று கேள்வி எழுப்பி உள்ளார். ஆரியத்திற்கு எதிர்கோட்பாடு திராவிடம் என்றால் ஜெயலலிதா திராவிட கட்சிக்கு தலைமை ஏற்ற போது திராவிடம் என்ன ஆனது என்று கேட்டுள்ளார்.

இதையும் படிங்க: சீமானுக்கு அதைப் பற்றி பேச அருகதை கிடையாது... டிஐஜி வருண்குமார் வழக்கறிஞர் காட்டம்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share