மறுபடியுமா! விஜய் விட நயன்தாரா வந்தா கூட்டம் இன்னும் அள்ளும்… சீமான் செம்ம கலாய்
விஜயை விட நயன்தாரா வந்தால் கூட்டம் இன்னும் அதிகமாக இருக்கும் என சீமான் தெரிவித்தார்.
2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருகிறது. அனைத்து கட்சி தலைவர்களும் தங்களது தேர்தல் சுற்றுப்பயணங்களை தொடங்கி நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் நேற்று முதல் தனது தேர்தல் சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளார். முதலில் திருச்சியில் தனது சுற்றுப்பயணத்தை தொடங்கிய விஜய் திமுக அரசையும் பாஜகவின் விமர்சித்து பேசி இருந்தார்.
அந்தந்த மாவட்டங்களில் உள்ள பிரச்சனைகள் தொடர்பாகவும் மக்கள் பிரச்சினைகள் தொடர்பாகவும் விஜய் உரையாற்றினார். இதையெல்லாம் ஒரு பக்கம் இருக்க விஜய் தனது அரசியல் வரலாற்றில் முதல் முறையாக தேர்தல் சுற்றுப்பயணத்தை தொடங்கி உள்ள நிலையில், வரலாற்றின் திருப்புமுனையாக அலைகடலென மக்கள் குவிந்தனர்.
மூக்கு மேல் விரல் வைத்து பார்க்கும் அளவிற்கு மக்கள் கூட்டம் கட்டுக்கடாமல் போனது. திருச்சியை தொடர்ந்து அரியலூரில் மக்கள் மத்தியில் விதை உரை நிகழ்த்தினார். விஜயை காணும் பூரிப்பில் குடும்பம் குடும்பமாக மக்கள் குவிந்தனர். விஜய்க்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதையும் படிங்க: யாரையும் கேக்குறது இல்ல! கார்ப்பரேட்டுகளுக்கே வாரி வழங்குறீங்க... விளாசிய சீமான்
இந்த நிலையில் அரியலூரில் தொடர்ந்து பெரம்பலூரில் விஜய் பிரச்சார மேற்கொள்ள இருந்தார். ஆனால் பிரச்சார வாகனமே உள்ளே நுழைய முடியாத அளவுக்கு பெரம்பலூரை ஸ்தம்பித்து போகும் நிலையில் கூட்டம் கூடியது. இதனால் விஜய் தனது பெரம்பலூர் சுற்றுப்பயணத்தை ரத்து செய்துவிட்டு சென்னைக்கு திரும்பிவிட்டார்.
விஜயின் பிரசார பயணத்திற்கு ஏராளமானோர் வருகை தந்தது குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இடம் கேள்வி எழுப்பப்பட்டது அப்போது, விஜய் விட நயன்தாராவுக்கு இன்னும் கூட்டம் அதிகமாக வரும் என சீமான் கிண்டலடித்தார். ரஜினி, அஜித் வந்துரும் கூட்டம் வர தான் செய்யும் என்றும் கூறினார். நான் பேசுவது உங்களுக்கு வேடிக்கையாக தான் தெரியும் என்றும் நான் இப்போது போதிப்பது உங்களுக்கு புரியாது., பாதிக்கும் போது தான் புரியும் எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: #BREAKING: விஜயலட்சுமி வழக்கு! சீமானை விசாரிக்க விதிக்கப்பட்ட தடை தொடரும்... சுப்ரீம் கோர்ட் உத்தரவு