×
 

வாகை சூடிய செங்கோட்டையன்... தமிழக அரசியல் களத்தில் செய்த மாஸ் சாதனை... ஸ்டன் ஆன அதிமுக...!

தமிழக அரசியலில் ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாக செல்வாக்கு செலுத்தி வரும் பழுத்த மூத்த அரசியல்வாதியாக வலம் வருபவர் செங்கோட்டையன். 

அதிமுகவின் தூணாக பார்க்கப்பட்ட கே.எஸ். செங்கோட்டையன் தனது 50 ஆண்டு கால அரசியல் பயணத்தில் ஒரு புதிய மயில் கல்லாக தவெகவின் அமைச்சர் அவையில் இடம் பெற்றிருக்கிறார். தமிழக தேர்தல் வரலாற்றில் ஒரே தொகுதியில் ஒன்பது முறை போட்டியிட்டு வெற்றி பெற்ற சாதனையாளர். தமிழக அரசியலில் ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாக செல்வாக்கு செலுத்தி வரும் பழுத்த மூத்த அரசியல்வாதியாக வலம் வருபவர் செங்கோட்டையன். 

கோபிசெட்டிப்பாளையம் அருகே உள்ள குள்ளம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கேஏ செங்கோட்டையன் 1970களின் தொடக்கத்தில் குள்ளம்பாளையம் பஞ்சாயத்து தலைவராக தனது பொது வாழ்க்கையை தொடங்கியவர். எம்ஜிஆர் அதிமுகவை தொடங்கியதுமே அதிமுகவில் காலடி எடுத்து வைத்தவர் முதலில் குள்ளம்பாளையம் கிளை செயலாளராக இருந்தார். பிறகு இரண்டு ஆண்டுகளில் ஈரோடு மாவட்ட செயலாளராக பதவி உயர்ந்தவர் 1977ல் சத்தியமங்கலம் தொகுதியிலிருந்து முதல் முறையாக எம்எல்ஏவாக தேர்வாகி சட்டமன்றத்திற்குள் அடியெடுத்து வைத்தார். 

எம்.ஜி.ஆரின் செல்லப்பிள்ளையாகவும், ஜெயலலிதாவின் விசுவாசியாகவும் அதிமுகவில் வலம் வந்த செங்கோட்டையன் போக்குவரத்து, வேளாண்மை, வருவாய் மற்றும் பள்ளி கல்வித்துறை என பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார் செங்கோட்டையன்அதிமுக கட்சியின் உட்கட்சி விவகாரங்கள் மற்றும் கருத்து வேறுபாடுகள் காரணமாக தமிழக வெற்றி கழகத்தில் கடந்த நவம்பர் மாதம் தம்மை இணைத்து கொண்டார். தவெகவின் தலைமை ஒருங்கணைப்பாளரான இவர் கட்சி மாறினாலும் தொகுதி மாறாது என்பதை மெய்ப்பிக்கும் விதமாக கோபிசெட்டி பாளையம் தொகுதியில் போட்டியிட்டு பத்தாவது முறையாக எம்எல்ஏவாக வெற்றி பெற்று அமைச்சராக பதவி ஏற்று இருக்கிறார். 

இதையும் படிங்க: விஜயை பாத்தா எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை பாத்த மாதிரி இருக்கு! செங்கோட்டையன் நெகிழ்ச்சி!!

தவெகவில் தளபதியின் தளபதியாக வலம் வந்த செங்கோட்டையன், அதிமுகவில் ஜெயலலிதாவிற்கு செய்தது போல் பொதுக்கூட்டங்களை ஒருங்கிணைப்பது, வழித்தடத்தை தீர்மானிப்பது, அனுமதி பெறுவது போன்ற முக்கியமான பணிகள் அனைத்தும் ஒன்மேன் ஆர்மியாக நின்று செய்தார். செங்கோட்டையன் வருகைக்கு முன்னதாக மக்கள் சந்திப்புகளில் சறுக்கிய தவெக, காவல்துறையிடம் அனுமதி பெறுவது முதல் களத்தில் மக்களை சந்திப்பது வரை சரியாக செயல்பட ஆரம்பித்தது. எந்த வழியில் சென்றால் அனுமதி பெற முடியும்?, மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்துவது எப்படி? எந்தெந்த வழிகளில் பயணிக்கலாம்? என விஜய் சுற்றுப்பயணத்தின் அனைத்து முக்கிய முடிவுகளையும் செங்கோட்டையன் தான் எடுத்து வந்தார். அதற்கு ஜாக்பாட் பரிசாகவே இந்த அமைச்சர் பதவி கிடைத்துள்ளது என அரசியல் விமர்சர்கள் கூறினாலும், 10வது முறையாக எம்.எல்.ஏ.வாக பதவியேற்று தமிழக அரசியல் வரலாற்றில் முத்திரை பதித்துள்ளார் என்பதே சரியானது. 

 

இதையும் படிங்க: பொறுமையா இருங்க.. இன்னும் ஓரிரு நாட்களில் நல்ல செய்தி வரும்..!! செங்கோட்டையன் அட்வைஸ்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share