×
 

விஜய் பேசும்போது மின்சாரம் துண்டிக்கப்பட்டதா? ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த செந்தில் பாலாஜி…!

விஜய் பிரச்சாரத்தின் போது மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கு செந்தில் பாலாஜி பதிலளித்தார்.

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் உற்சாகத்துடன் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வந்தார். கரூரில் சுற்றுப்பயணம் செய்த விஜய் உற்சாகத்துடன் வரவேற்க காத்திருந்தனர். தொண்டர்களின் இந்த உற்சாகம் சிறிது நேரம் கூட நிலைக்கவில்லை. இந்த பிரச்சாரத்தின் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டதில் 41 பேர் உயிரிழந்தனர். பலர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். 

இந்த நிலையில், கரூர் திமுக அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்தார். அனைத்து உதவிகளையும் கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேருக்கும் தனது இரங்கலை தெரிவித்தார். கடந்த 27 ஆம் தேதி கரூரில் நடந்த துயரச்சம்பவம் கொடுமையானது என்றும் கூறினார்.

கூட்டத்திற்கு எவ்வளவு பேர் வருவார்கள் என்பதை முடிவு செய்ய வேண்டியதும், உணவு, குடிநீர் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்த வேண்டியதும் சம்பந்தப்பட்ட அரசியல் கட்சிகளின் கடமை என்று கூறினார். ஒரு காலி குடிநீர் பாட்டில் கூட அந்த இடத்தில் இல்லை என்றும் குறிப்பிட்டார். மின்சாரத்தை துண்டிப்பது தொடர்பாகவும் அப்போது விளக்கம் அளித்தார்.

இதையும் படிங்க: உயிர்கள் போயிருக்கு... அரசியலாக்காதீங்க! செந்தில் பாலாஜி பரபரப்பு பேட்டி...!

கூட்ட நெரிசல் காரணமாக தமிழக வெற்றி கழகத்தின் தொண்டர்கள் ஜெனரேட்டர் அறைக்கு சென்றதாகவும், அதன் காரணமாகவே ஜெனரேட்டர் அணைக்கப்பட்டதாகவும், அதே நேரத்தில் தெருவிளக்குகள் அணைக்கப்படவில்லை என்றும் கூறினார். கரூர் சம்பவம் தொடர்பாக வீடியோக்களை பகிர்ந்து ஆதாரப்பூர்வமாக பேசினார். பிரச்சார இடத்திற்கு விஜய் சரியான நேரத்திற்கு வந்திருக்க வேண்டும் என்றும் கூறி உள்ளார். 

இதையும் படிங்க: செந்தில் பாலாஜியை டார்கெட் செய்கிறாரா விஜய்? திருமா கடும் தாக்கு...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share