×
 

உச்சநீதிமன்றம் வைத்த குட்டு... டாஸ்மாக் வழக்கில் நடந்த திடீர் திருப்பம்... செந்தில் பாலாஜி எடுத்த முக்கிய முடிவு...!

டாஸ்மாக் முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்த நிலையில், இன்று காலை 11 மணிக்கு லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் இன்று விசாரணைக்காக ஆஜராகிறார்

 டாஸ்மாக் முறைகேடு வழக்கு தொடர்பாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று ஆலந்தூரில் இருக்கக்கூடிய லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் காலை 11 மணி அளவில் விசாரணைக்காக ஆஜராக இருக்கிறார். 

ஏற்கனவே டாஸ்மாக்கில் முறைகேடு நடந்திருப்பதாகக் கூறி லஞ்ச ஒழிப்புத்துறை 41 இடங்களில் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியுடன் தொடர்புடைய இடங்கள், அதேபோன்று முன்னாள் டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் உள்ளிட்ட மூத்த மண்டல அதிகாரிகள் தொடர்புடைய இடங்களிலும் ஏற்கனவே லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இந்த முறைகேடு தொடர்பாக சோதனையில் ஈடுபட்டனர்.

செந்தில் பாலாஜியிடமும் இந்த விசாரணை மேற்கொள்ளப்பட்ட நிலையில், அவர்களுடைய வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டிருந்தன.

இதையும் படிங்க: டாஸ்மாக் முறைகேடு வழக்கில் காவல்துறைக்கு பறந்த நோட்டீஸ்... உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு...!

இந்த நிலையில்தான் இந்த வழக்கு தொடர்பாக இரண்டு, மூன்று நபர்களையும் போலீசார் கைது செய்தனர். இதில் ரத்தேஷ் என்பவர் தலைமறைவாக இருந்து வருவதால், அவருக்கு எதிராகவும் லுக் அவுட் நோட்டீசை லஞ்ச ஒழிப்புத்துறை பிறப்பித்திருக்கிறது.

இந்த நிலையில்தான் இந்த விவகாரம் தொடர்பாக செந்தில் பாலாஜி உச்சநீதிமன்றத்திற்குச் சென்று, இது தொடர்பாக முன்ஜாமீனும் பெற்றார். குறிப்பாக, உச்சநீதிமன்றம் அவருக்கு பல்வேறு நிபந்தனைகளையும் விதித்தது. விசாரணைக்கு அவர் ஒத்துழைப்பு வழங்க வேண்டும், சம்மன் கொடுத்தால் ஆஜராக வேண்டும் உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளும் அவருக்கு விதிக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில், தற்போது லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இது தொடர்பாக செந்தில் பாலாஜிக்கு சம்மன் கொடுத்திருக்கக்கூடிய நிலையில், இன்று விசாரணைக்காக அவர் ஆஜராகிறார்.

இவ்வளவு நாட்களாக சட்டப்பேரவை நடைபெற்றிருந்த நிலையில், இது தொடர்பாக தற்போது சட்டப்பேரவை இல்லாத நாளான இன்று அவர் விசாரணைக்காக ஆஜராகும்படி சம்மன் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதன்படி, அவர் இன்று ஆஜராகிறார்.

அவரிடம் பல்வேறு கேள்விகள் கேட்க லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தயாராக வைத்திருக்கிறார்கள். 100-க்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்கத் தயாராக வைத்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே நடைபெற்ற சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்து, அதன் அடிப்படையில்தான் தற்போது அவரிடம் கேள்விகள் கேட்கப்பட்டு விசாரணை மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

டாஸ்மாக்கில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது. குறிப்பாக, போக்குவரத்தில் பல்வேறு முறைகேடுகள், அதேபோன்று ஒரு பாட்டிலுக்கு குறிப்பிட்ட தொகை வீதம் பணம் வாங்கியதிலும் பல்வேறு முறைகேடுகள் எனப் பல்வேறு முறைகேடுகள் தொடர்பாக எஃப்ஐஆரில் லஞ்ச ஒழிப்புத்துறை குறிப்பிட்டிருந்தது.

இந்த முறைகேடுகள் தொடர்பான அனைத்து கேள்விகளையும் செந்தில் பாலாஜியிடம் கேட்டு விசாரணை நடத்தத் திட்டமிட்டிருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. காலை 11 மணிக்கு செந்தில் பாலாஜி ஆஜராக இருக்கிறார்.

இதையும் படிங்க: எந்தெந்த டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன? 717 கடைகளின் பட்டியல் வெளியீடு..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share