#BREAKING அதிகாலையிலேயே பயங்கரம்...!! 7 பேருந்துகள், 3 கார்கள் அடுத்தடுத்து மோதி தீ விபத்து... கிடுகிடுவென உயரும் பலி எண்ணிக்கை...!
உத்தரபிரதேச மாநிலம் மதுராவில் இன்று அதிகாலை பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் மதுராவில் உள்ள டெல்லி-ஆக்ரா விரைவுச் சாலையில் மூடுபனி காரணமாக ஏழு பேருந்துகளும் மூன்று கார்களும் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டன. விபத்துக்குப் பிறகு, பேருந்துகளும் கார்களும் தீப்பிடித்து கொளுந்து விட்டு எரிய ஆரம்பித்தன. இந்த கோர விபத்தில் இதுவரை நான்கு பேர் தீயில் கருகி இறந்துள்ளதாகவும், காயமடைந்த பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் சந்திர பிரகாஷ் சிங்கின் தெரிவித்துள்ளார்.
பால்தேவ் காவல் நிலையப் பகுதிக்கு உட்பட்ட யமுனா விரைவுச் சாலையின் மைல்கல் 127, இன்று அதிகாலை 4 மணியளவில் அடர்ந்த மூடுபனி காரணமாக வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. அதிகாலை என்பதால், பெரும்பாலான பயணிகள் தூங்கிக் கொண்டிருந்ததால் பல பயணிகள் தீக்கிரையானதாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் முதற்கட்டமாக 4 பேர் உயிருடன் எரிந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், ஆறு முதல் ஏழு பேர் உயிருடன் எரிந்து இறந்திருக்கலாம் என்றும், பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்றும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
சுமார் 150 பேர் 20 ஆம்புலன்ஸ்களில் யஷ்பால் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர். மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்பி உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர். மீட்புப் பணி நடந்து வருகிறது. தீயை அணைக்கும் பணியிலும் காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் பணியிலும் காவல்துறை, தீயணைப்புப் படை மற்றும் எஸ்டிஆர்எஃப் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
உடல்கள் கைப்பற்றப்பட்டு, மேலும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்பி உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர்.
#WATCH | Mathura, UP | Several buses catch fire on the Delhi-Agra Expressway. Casualties feared. Further details awaited. pic.twitter.com/9J3LVyeR3P
— ANI (@ANI) December 16, 2025