×
 

வங்கதேசத்தில் மீண்டும் வெடித்தது வன்முறை... தீக்கிரைக்கான பத்திரிகை அலுவலகம்... இந்திய தூதரகம் மீது தாக்குதல்...! 

வங்கதேசத்தில் மீண்டும் கலவரம் வெடித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வங்கதேசத்தின் ஜூலை இயக்கத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவரும், இன்கிலாப் மஞ்சா செய்தித்தாளின் பத்திரிகையாளருமான ஷெரிப் உஸ்மான் ஹாடி நேற்று இரவு உயிரிழந்ததில் இருந்து டாக்காவில் கலவரம்  வெடித்துள்ளது. 

டாக்கா-8 தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுவதாக ஷெரீப் உஸ்மான் ஹாடி அறிவித்திருந்த நிலையில், டிசம்பர் 12ம் தேதி அடையாளம் தெரியாத நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் படுகாயம் அடைந்தார். இதனையடுத்து டிசம்பர் 18 அன்று முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசாங்கம் அவரை சிங்கப்பூரில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்த நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

ஷெரீப் உஸ்மான் பின் ஹாடியின் கொலைக்கு நீதி கோரி ஆதரவாளர்கள் மற்றும் ஆர்வலர்கள் டாக்காவின் ஷாபாக்கில் ஆயிரக்கணக்கில் ஒன்றுகூடினர். ஹாடியின் மரணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, டாக்கா பல்கலைக்கழக வளாகம் உட்பட தலைநகரின் பல்வேறு பகுதிகளில் பல மாணவர் அமைப்புகள் போராட்டங்களை நடத்தின. 'தேசிய மாணவர் சக்தி' என்ற அமைப்பு, டாக்கா பல்கலைக்கழக வளாகத்தில் துக்க ஊர்வலத்தை நடத்தி, ஷாபாக் வழியாக பிரதான சாலை சந்திப்பில் போராட்டத்தில் இணைந்தது.

இதையும் படிங்க: வங்கதேசம்: இந்தியா விசா விண்ணப்ப மையம் மூடல்..!! வெளியான அதிரடி அறிவிப்பு..!!

இந்த பேரணியின் போது, ஹாடி மீது துப்பாக்கிச்சூடு நடத்தியவர்களை கைது செய்யத் தவறியதாக கூறி வங்கதேசத்தின் உள்துறை ஆலோசகரும், ஓய்வு பெற்ற லெப்டினனட் ஜெனரலுமான ஜஹாங்கீர் ஆலம் சவுத்ரியின் உருவ பொம்மையை போராட்டக்காரர்கள் தீயிட்டு கொழுத்தினர். 

தலைநகர் கர்வான் பஜாரில் அமைந்துள்ள பரவலாகப் பரப்பப்படும் வங்காள நாளிதழான 'புரோத்தோம் அலோ' அலுவலகத்தை போராட்டக்காரர்கள் அடித்து நொறுக்கி தீயிட்டு கொழுத்தினர். வங்கதேசத்தில் மீண்டும் வெடித்துள்ள போராட்டத்தைக் கட்டுப்படுத்த, நாட்டு மக்கள் அனைவரும் பொறுமையையும், நிதானத்தையும் கடைப்பிடிக்க வேண்டும் இடைக்கால அரசாங்கத்தின் பிரதமரான முகமது யூனுஸ் கேட்டுக்கொண்டுள்ளார். 

ஹாடியை கொலை செய்தவர்களை விரைவில் கைது செய்வதாகவும், இறந்தவரின் மனைவி மற்றும் குழந்தைக்கு அரசாங்கம் பொறுப்பேற்பதாகவும் அறிவித்த அவர், நாளை தேசிய துக்க தினமாகவும் அறிவித்துள்ளார். 

இதனிடையே, ஹாடி மீது துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் இந்தியாவிற்கு தப்பிச் சென்றுவிட்டதாக கூறி போராட்டக்காரர்கள் இந்தியாவிற்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். கொலையில் தொடர்புடைய நபர்களை இந்திய அரசாங்கம் தங்களிடம் ஒப்படைக்கும் வரை வங்கதேசத்தில் உள்ள இந்திய தூதரகத்தை திறக்க விடமாட்டோம் என தேசிய குடிமக்கள் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான சர்ஜிஸ் ஆல்ம் எச்சரித்துள்ளார். 

இதையும் படிங்க: ஷேக் ஹசீனாவின் அறிக்கையை ஒளிபரப்பக்கூடாது..!! மீடியாக்களுக்கு பறந்த வார்னிங்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share