நடுவானில் மோதி வெடித்து சிதறிய ஹெலிகாப்டர்கள்!! உடல்கருகி பைலட் பலி!! அமெரிக்காவில் கோர விபத்து!
அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் நடுவானில் பறந்து கொண்டிருந்த இரு ஹெலிகாப்டர்கள் மோதி விபத்துக்குள்ளானதில், பைலட் ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவர் பலத்த காயமடைந்தார்.
நியூயார்க்: அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் நடுவானில் பறந்து கொண்டிருந்த இரு ஹெலிகாப்டர்கள் மோதி விபத்துக்குள்ளானதில் ஒரு பைலட் உயிரிழந்தார். மற்றொரு பைலட் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து அட்லாண்டிக் கவுன்டியில் உள்ள ஹாமண்டன் விமான நிலையத்துக்குட்பட்ட பகுதியில் ஏற்பட்டது.
விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர்கள் என்ஸ்ட்ரோம் எஃப்-28ஏ மற்றும் என்ஸ்ட்ரோம் 280சி வகையைச் சேர்ந்தவை என்று அமெரிக்க பெடரல் விமான நிர்வாகம் தெரிவித்துள்ளது. விபத்தின் போது இரு ஹெலிகாப்டர்களிலும் பைலட்களைத் தவிர வேறு யாரும் பயணம் செய்யவில்லை என்று தெரியவந்துள்ளது.
ஒரு ஹெலிகாப்டர் வானில் வட்டமிட்டபடி கீழே விழுந்த காட்சி வீடியோவாக பதிவாகி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
இதையும் படிங்க: பழங்குடியின மாணவரின் உயிரை பறித்த கும்பல்!? பொறுப்பில்லாத சமூகமாக நாம் மாறிவிடக் கூடாது! ராகுல்காந்தி கண்டனம்!
விபத்து நடந்ததும் அதிகாரிகள் உடனடியாக மீட்புப் பணிகளைத் தொடங்கினர். உயிரிழந்த பைலட்டின் உடல் மீட்கப்பட்டது. காயமடைந்த மற்றொரு பைலட் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த விபத்து குறித்து அமெரிக்க தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் மற்றும் பெடரல் விமான நிர்வாகம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளன. ஹெலிகாப்டர்களின் வழித்தடம், தொலைத்தொடர்பு, வானிலை நிலவரம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் ஆய்வு செய்யப்பட உள்ளன. விபத்து எப்படி நடந்தது என்பது குறித்த தகவல்கள் இன்னும் முழுமையாக வெளியாகவில்லை.
இதுபோன்ற விமான விபத்துகள் அமெரிக்காவில் அவ்வப்போது நடந்து வருவதால் விமான பாதுகாப்பு விதிமுறைகளை மேலும் கடுமையாக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன.
இதையும் படிங்க: தடையின்றி கிடைக்கும் போதைப்பொருள்!! தமிழகத்தில் காட்டாட்சி ராஜ்ஜியம்! அண்ணாமலை குற்றச்சாட்டு!