தண்ணி கிடைக்குமா? தனியாக இருந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்!! அத்துமீறிய காமுகன்!! அரங்கேறிய கொடூரம்!
கர்நாடகாவில் தனியாக இருந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் தண்ணீர் கேட்பது போல நடித்து பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கர்நாடக மாநிலம் ராமநகர் அரோஹள்ளி பகுதியில், மனநலம் பாதிக்கப்பட்ட 18 வயது இளம் பெண்ணுக்கு பாலியல் வன்முறை ஏற்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 'தண்ணீர் கேட்பது' போல நடித்து வீட்டில் நுழைந்த மர்ம நபர், தனியாக இருந்த இளம் பெண்ணை வலுக்கட்டாயமாக தாக்கியதாகப் புகார். போலீசார் குற்றவாளியை கைது செய்துள்ளனர்.
சம்பவ விவரம்
ராமநகர் அரோஹள்ளியில் வசிக்கும் ஒரு தம்பதிக்கு மனநலம் பாதிக்கப்பட்ட மகள் உள்ளார். சம்பவத்தன்று, தம்பதி வெளியே சென்றதால் இளம் பெண் தனியாக வீட்டில் இருந்தார். இதை அறிந்த பெலகாவி மாவட்டம் கானாப்புரத்தைச் சேர்ந்த நவீன் ராவ் (வயது 25) என்பவர், 'தண்ணீர் கிடைக்குமா?' என வீட்டுக்கு வந்தார்.
இளம் பெண் மறுத்ததும், சிறிது நேரம் கழித்து மீண்டும் வந்து வீட்டுக்குள் நுழைந்து, வலுக்கட்டாயமாக பாலியல் வன்முறை செய்தார். சம்பவத்துக்குப் பின் தப்பிய நவீன் ராவ், பெற்றோருக்கு தெரியாமல் அடிக்கடி இளம் பெண்ணை பார்க்க வந்தவர் என்பது விசாரணையில் தெரிந்தது.
இதையும் படிங்க: ஓடும் காரில் இளம்பெண் கூட்டு பலாத்காரம்! லிப்ட் கொடுப்பது போல் நடித்து கயவர்கள் அட்டூழியம்!
பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம் குறித்து பெற்றோருக்கு தெரிந்ததும், கதறி அழுந்தனர். மேலும் இளம் பெண்ணை வைத்து, அரோஹள்ளி போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர். இதையடுத்து, போலீசார் வழக்கு பதிவு செய்து, நவீன் ராவை கைது செய்தனர். கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு காலு சிங், "பாலியல் வன்முறை, அச்சுறுத்தல் ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு. குற்றவாளியிடம் தீவிர விசாரணை நடக்கிறது" என தெரிவித்தார்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மனநலம் பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாக்க போலீஸ் மற்றும் சமூக நடவடிக்கைகள் தீவிரப்பட வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். விசாரணை முடிவுகள் விரைவில் வெளியாகும் என போலீஸ் உறுதியளித்துள்ளது.
இதையும் படிங்க: படுக்கை அறையில் ரகசிய கேமிரா! தினமும் தாம்பத்யத்திற்கு அழைத்து தொந்தரவு!! மனைவி மீது கணவன் புகார்!