×
 

அடேங்கப்பா... சிம் கார்டுகளில் இருந்து 191 கிராம் தங்கம் எடுத்த நபர்... மிரள வைக்கும் சம்பவம்..!

பழைய சிம் கார்டுகளில் இருந்து 191 கிராம் தங்கம் பிரித்து எடுத்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

சீனாவின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள குவாங்டாங் மாகாணத்தின் ஹுய்சோ நகரைச் சேர்ந்த "கியாவோ" என்ற பெயரில் அறியப்படுபவர் ஒருவர், பழைய சிம் கார்டுகள் மற்றும் பிற மின்னணு கழிவுப் பொருட்களிலிருந்து 191 கிராம் தங்கத்தை பிரித்தெடுத்து உலக அளவில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளார். இவர் மதிப்புமிக்க உலோகக் கழிவுகளை சுத்திகரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருபவர்.

 ஜனவரி 20-ஆம் தேதி அவர் வெளியிட்ட ஒரு வீடியோ வைரலாகி, சீன சமூக ஊடகங்களில் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட பார்வைகளைப் பெற்றது. இதில், அவர் தூக்கி எறியப்பட்ட பழைய சிம் கார்டுகளையும், தொலைத்தொடர்பு சிப் கழிவுகளையும் சேகரித்து, ரசாயனப் பதனிடுதல் மூலம் தங்கத்தை பிரித்தெடுக்கும் முழு செயல்முறையை விளக்கியிருந்தார்.

சுமார் இரண்டு டன் எலக்ட்ரானிக் கழிவுகளை பயன்படுத்தி இந்த அளவு தங்கத்தைப் பெற்றதாக அவர் தெரிவித்தார். இது வெறும் சிம் கார்டுகள் மட்டுமல்லாமல், பல்வேறு தொலைத்தொடர்பு சாதனக் கழிவுகளிலிருந்து கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. செயல்முறையில், சிம் கார்டுகளை சிறு துண்டுகளாக உடைத்து, ஆசிட் மற்றும் பிற ரசாயனக் கலவைகளில் போட்டு வேதி வினைகளை ஏற்படுத்தினார்.

இதையும் படிங்க: பாலியல் சீண்டல் குற்றச்சாட்டு... நான் எந்த தப்பும் பண்ணல..! உயிரை மாய்த்துக்கொண்ட நபரால் பரபரப்பு..!

பின்னர் வடிகட்டி, சூடாக்கி, இறுதியாக தங்க மண்ணை தனியாகப் பிரித்து, அதை உருக்கி திடமான தங்கமாக மாற்றினார். இதன் மூலம் கிடைத்த 191.73 கிராம் என்று குறிப்பிடப்பட்டது. இந்திய சந்தையில் இதன் மதிப்பு ரூ.26 லட்சம் முதல் ரூ.31 லட்சம் வரை இருக்கலாம் என்று கணக்கிடப்பட்டு உள்ளது. இந்த சம்பவம் உலகத்தையே மிரள செய்கிறது. 

இதையும் படிங்க: அழுது கொண்டே HIT ஆர்டர் போட்ட கஸ்டமர்... டெலிவரி பாய் செய்த நெகிழ்ச்சி சம்பவம்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share