×
 

60 ஆண்டுகால ஆட்சி.. தொடர்ந்து 14 தேர்தலில் வெற்றி.. சிங்கப்பூரில் பிஏபி கட்சி சாதனை..!

சிங்கப்பூரில் நடந்த பொதுத்தேர்தலில் ஆளும் மக்கள் செயல் கட்சி 87 இடங்களில் வெற்றி பெற்று இமாலய வெற்றி பெற்றுள்ளது. 60 ஆண்டுகளாக தொடரும் ஆட்சியை தக்க வைத்துள்ளது.

சிங்கப்பூரில் கடந்த 1965- ஆம் ஆண்டுக்கு பின் தொடர்ந்து 60 ஆண்டுகளாக மக்கள் செயல் கட்சி ஆட்சி அதிகாரத்தில் நீடித்து வருகிறது. வெளிப்படையான நிர்வாகவும், சிங்கப்பூரின் அசுரத்தனமான வளர்ச்சியும் அந்த கட்சி மீதான மக்களின் நம்பிக்கைக்கான முக்கிய காரணங்களாக உள்ளன. இந்த நிலையில் மக்கள் செயல் கட்சி கடந்த 2020 தேர்தலில் மீண்டும் தனது மெஜாரிட்டியை நிரூபித்து ஆட்சியைக் கைப்பற்றியது. மொத்தம் உள்ள 93 தொகுதிகளில் 83 தொகுதிகளில் மக்கள் செயல் கட்சி வெற்றி பெற்றிருந்தது. 

ஆனால் அதற்கு முன்பு நடந்த பொதுத்தேர்தலில் எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 6-ல் இருந்து 10 ஆக உயர்ந்தது. ஆளுங்கட்சியான மக்கள் செயல் கட்சியின் வாக்கு வங்கியும் 61 சதவீதமாக சரிந்தது. இந்த நிலையில் சிங்கப்பூர் பொதுத்தேர்தலுக்கான அறிவிப்பு வெளியானது. பொதுத்தேர்தலை முன்னிட்டு கடந்த ஏப்ரல் 15-ந்தேதி சிங்கப்பூர் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. கடந்த மாதம் 23-ந்தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கியது.

இதையும் படிங்க: அரபிக்கடல் ஆப்ரேசன்.. கடற்படை தளபதிக்கு மோடி கொடுத்த உத்தரவு.. அச்சத்தில் உறையும் பாகிஸ்தான்..!

நேற்று மே 3-ந்தேதி பொதுத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. சிங்கப்பூர் சுதந்திரம் அடைந்த பின் நடைபெறும் 14-வது பொதுத்தேர்தல் இதுவாகும். இந்த தேர்தலில் ஆளுங்கட்சியே வெற்றி பெரும் என கருத்துக்கணிப்புகள் தெரிவித்தன. அதன்படியே சிங்கப்பூர் பொதுத்தேர்தலில், ஆளும் மக்கள் செயல் கட்சி (People's Action Party) கட்சி 87 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது. இதன்மூலம் அக்கட்சியின் அக்கட்சியின் லாரன்ஸ் வாங் மீண்டும் பிரதமராக பதவியேற்க உள்ளார்.

அதோடு மக்கள் செயல் கட்சியின் வாக்கு சதவிகிதம் 2020 தேர்தலில் 61.2% ஆக இருந்த நிலையில், தற்போது 65.6% ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் சிங்கப்பூரின் பிரதான எதிர்கட்சியான தொழிலாளர் கட்சி தனது 10 இடங்களை தக்க வைத்துள்ளது. இந்த தேர்தலில் மக்கள் செயல் கட்சி வெற்றி பெற்ற நிலையில் விரைவில் புதிய அமைச்சரவை அறிவிக்கப்படும் என பிரதமர் லாரன்ஸ் வோங் அறிவித்துள்ளார். இத்தேர்தல் முடிவுகள் தொடர்பாக தேசிய ஒருமைப்பாட்டுக் கட்சியின் தலைவர் ஸ்பென்சர் இங் கூறுகையில், எதிர்க்கட்சிகளிடம் போதுமான ஒற்றுமை இல்லை என ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

இந்த நிலையில் சிங்கப்பூர் பிரதமர் தேர்தலில் வெற்றி பெற்ற லாரன்ஸ் வாங்குக்கு வாழ்த்து தெரிவித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: பொதுத்தேர்தலில் பெரும் வெற்றி பெற்ற லாரன்ஸ் வாங்கை வாழ்த்துகிறேன். இந்தியாவும், சிங்கப்பூரும் வலுவான உறவுகளை கொண்டுள்ளது. இருநாட்டு மக்களும் உறவுகளை கொண்டு உள்ளனர். சிங்கப்பூருடன் நெருக்கமாக இணைந்து பணியாற்றுவதை எதிர்நோக்கி உள்ளேன். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினும் சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங்குக்கு தமது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். சிங்கப்பூர் மக்களிடமிருந்து மகத்தான ஆணையைப் பெற்று, தலைவராக தனது முதல் தேர்தலில் மக்கள் செயல் கட்சியை தொடர்ச்சியாக 14வது வெற்றிக்கு வழிநடத்தியது, தமிழ் சமூகத்துடனான அவரது தொடர்ச்சியான ஈடுபாடும், தமிழ் மொழி மற்றும் கலாச்சாரத்தை நிலைநிறுத்துவதற்கான முயற்சிகளும் சிங்கப்பூரின் உள்ளடக்கிய உணர்வைப் பிரதிபலிக்கின்றன. சிங்கப்பூர் நாடாளுமன்றத்திற்கு புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் என தெரிவித்து உள்ளார்.

இதையும் படிங்க: உச்சத்தில் போர் பதற்றம்.. முக்கிய இடங்களில் அபாய சைரன்.. இந்தியாவால் அலறும் பாகிஸ்தான்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share