×
 

ஸ்பென் நாட்டில் நடந்த பயங்கரம்; இந்தியாவுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையா? 

புதுப்பிக்கத்தக்க தாய் வீடான ஸ்பெயின் இருளில் மூழ்கிய சம்பவம் இந்தியாவிற்கு மிகப்பெரிய எச்சரிக்கையாக மாறியுள்ளது. 

ஸ்பெயின் நாட்டில் கடந்த வாரம் ஏற்பட்ட கடுமையான மின்வெட்டு அந்த நாட்டை இருளில் மூழ்கடித்தது. மின்சாரத்தை கடத்த உதவும் கிரிட்டளில் ஏற்பட்ட மேலாண்மை சிக்கல் காரணமாக இந்த மின்தடை ஏற்பட்டிருப்பதாக வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். உலகிலேயே புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை அதிகம் பயன்படுத்தும் நாடான ஸ்பெயினில் ஏற்பட்ட இந்த சிக்கல் பல நாடுகளின் மின்சார கடத்தும் முறையை கேள்விக்குள்ளாக்கி உள்ளது.

குறிப்பாக புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் அதிக கவனம் செலுத்தி வரும் இந்தியாவில் இது முக்கிய விவாத பொருளாக மாறுகிறது. மின்தொடை என்பது இந்தியாவுக்கு புதிதல்ல. 2012 ஜூலை மாதத்தில் மின்சாரம் கடத்தும் கிரிடுகளில் ஏற்பட்ட கோளாறு காரணமாக 40 கோடி இந்தியர்கள் மின்சாரம் இன்றி பல நாட்கள் தவித்தனர். அதன் பிறகு நாடு முழுவதும் கிரிட்டுகளின் தரம் குறித்து பெரிய அளவில் அரசு மற்றும்  தனியார் மின்மைப்புகள் அதிக கவனம் செலுத்த தொடங்கின. 

துப்பிக்க இயலாத முறையில் தயாராகும் மின்சாரத்தை கடத்த பயன்படுத்தும் கிரிட்டகளையே புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் வரும் மின்சாரத்தை கடத்தவும் பயன்படுத்தும் வழக்கம் இந்தியாவில் உள்ளது. நாளுக்கு நாள் வளர்ந்து வரும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலமான மின்சாரத்திற்கு பிரத்தியேக கிரிட்டகள் அமைப்பதில் அரசு அதிக கவனம் செலுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. அடுத்த 10 ஆண்டுகளில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம் 300 கிகாவாட் மின்சாரம் உற்பத்திக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: இந்தியாவால் நடுக்கம்... பாகிஸ்தானின் வலி- பயம் இரண்டையும் நீக்கும் ஒரே 'சூரன்' இதுதான்..!

இந்த ஆண்டு புதிதாக சேர்க்கப்பட்ட 34 கிகாவாட்டில் 85% புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம் கொணரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறையில் ரினியூ மற்றும் டாட்டா கேப்பிடல் போன்ற நிறுவனங்கள் அதிக அளவில் முதலீடு செய்கின்றன. ஐக்கிய அமீரகத்தை சேர்ந்த நிறுவனங்கள் 100 மில்லியன் டாலர் அளவு முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளன. இது போன்ற முதலீடுகள் வரவேற்கத்தக்கது. இருப்பினும் சூரிய எரிசக்திக்கான தகடுகள் தயாரிப்பில் கூடுதல் கவனம் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம் வரும் மின்சாரத்தை கடத்த தரமான கிரிடுகள் அமைப்பது அதை நிர்வகிக்கும் நிறுவனங்களின் செயல்பாடுகளை தொடர்ந்து கண்காணிப்பது போன்றவை மட்டுமே ஸ்பெயினில் ஏற்பட்ட மின்தடை போன்ற சம்பவங்கள் அதிகம் நடைபெறாமல் இருக்க உதவும்.

 சமீபத்தி ஆய்வின்படி எரிசக்தி துறையில் 400 மில்லியன் டாலர் வரை முதலீடுகள் வர வாய்ப்புள்ளது. இப்படி வளர்ந்து வரும் ஒரு துறையில் அரசும் தனியார் நிறுவனங்களும் முறையான திட்டமிடலுடன் திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என நிபுணர்கள் வலியுறுத்தி வருகின்றனர். 
 

இதையும் படிங்க: "உள்ளாடையை எதுக்கு கழட்டணும்".. நீட் தேர்வு கெடுபிடிகளால் கண்கள் சிவந்த சீமான்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share