×
 

இலங்கையில் நிலநடுக்கம்..! குலுங்கிய கட்டடங்கள்... பதறி ஓடிய மக்கள்..!

இலங்கையின் வடக்கு கடற்கரை பகுதியாக இருக்கும் முல்லைத் தீவு அருகே நிலநடுக்கம் ஏற்பட்டது.

இலங்கையின் வடக்கு கடற்கரைப் பகுதியான முல்லைத்தீவு அருகே இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தவில்லை என்றாலும், உள்ளூர் மக்களுக்கு சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.5 முதல் 3.6 வரை பதிவாகியுள்ளதாக இலங்கையின் புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் உறுதிப்படுத்தியுள்ளது.

நிலநடுக்கத்தின் மையப்புள்ளி திருகோணமலை மற்றும் முல்லைத்தீவு இடையேயுள்ள கடற்பரப்பில் இருந்தது. இதனால் கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு அதிர்வு தெளிவாக உணரப்பட்டதாக கூறப்பட்டு உள்ளது. இலங்கை போன்ற தீவு நாடுகளில் கடலுக்கடியில் ஏற்படும் சிறிய நிலநடுக்கங்கள் அவ்வப்போது நிகழ்வது வழக்கம். இந்தப் பகுதி இந்தியப் பெருங்கடலின் ஒரு பகுதியாக இருப்பதால், தட்டுக்களின் இயக்கங்களால் ஏற்படும் சிறு அதிர்வுகள் இயற்கையானவை.

ஆனால் இந்த நிலநடுக்கம் மிகவும் ஆழமற்றதாகவும், சக்தி குறைவாகவும் இருந்ததால் எந்த விதமான சேதமும் ஏற்படவில்லை. கட்டிடங்கள் பாதிக்கப்படவில்லை, உயிரிழப்புகள் இல்லை. மேலும், சுனாமி எச்சரிக்கையும் பிறப்பிக்கப்படவில்லை இருப்பினும், கடற்கரைப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் சற்று பதற்றம் அடைந்தனர்.

இதையும் படிங்க: தமிழர்களுடன் பொங்கல் கொண்டாடிய இலங்கை அதிபர்..!! ஆனால் மீனவர்கள் கேட்பதை இதைத்தான்..!!

ஏனெனில், 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட பெரும் சுனாமி நினைவுகள் இன்னும் பலரது மனதில் பதிந்திருக்கின்றன. அப்போது முல்லைத்தீவு உள்ளிட்ட வடக்கு கிழக்கு கடற்கரைப் பகுதிகள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளானது குறிப்பிடத்தக்கது. நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிப்பில் உள்ளனர். மக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றாலும், சற்று பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. 

இதையும் படிங்க: இதற்கு தீர்வே இல்லையா? தொடரும் மீனவர்கள் கைது... வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share