×
 

அப்படி என்ன அலட்சியம்..? 430 கோடி இழப்பீடு கட்டுங்க... சிக்கலில் ஸ்டார்பக்ஸ்..!

சரியாக பார்சல் கட்டாததால் டெலிவரி ஊழியர் மீது தேநீர் சிந்திய விவகாரத்தில் 433 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க ஸ்டார்பக்ஸ் நிறுவனத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

ஸ்டார் பக்ஸ் என்பது ஒரு பிரபலமான காபி கஃபே செயின் லிங்க், இது உலகம் முழுவதும் பல இடங்களில் உள்ளது, குறிப்பாக காபி மற்றும் இதர பானங்களுக்காக அறியப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், ஸ்டார்பக்சில் பார்சல் கட்டும் போது செய்த தவறு காரணமாக ஸ்டார்பக்ஸ் தேநீர் சிந்தியதால் டெலிவரி ஊழியருக்கு 50 மில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 433.49 கோடி) வழங்க லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டி நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

கடந்த 2020-ம் லாஸ் ஏஞ்சல்ஸ்-இல் உள்ள ஸ்டார்பக்ஸ் விற்பனையகத்தில் இருந்து தேநீர் விநியோகம் செய்யும் பணியில் மைக்கேல் கார்சியா என்ற ஊழியர் ஈடுபட்டிருந்தார். சம்பவம் நடந்த அன்று மைக்கேல் விநியோகம் செய்ய எடுத்துச் சென்ற தேநீர் பார்சல் சரியாக மூடப்படாமல் இருந்துள்ளது. இதை துளியும் எதிர்பார்க்காத மைக்கேல் அதனை வாடிக்கையாளருக்கு விநியோகம் செய்ய வாகனத்தில் எடுத்துச் சென்றுள்ளார்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டின் சாபக்கேடு... 'டூப்' போலீஸ் அண்ணாமலை- வறுத்தெடுத்த சேகர்பாபு..!

அப்போது, பார்சல் சரியாக மூடப்படாததால் தேநீர் அவர் மீது சிந்தியுள்ளது. இதில் மைக்கேல் இடுப்பின் கீழ் பகுதி, தொடையின் உள்பகுதி மற்றும் ஆண்குறி உள்ளிட்ட இடங்களில் பலத்த தீக்காயங்கள் ஏற்பட்டன. இதைத் தொடர்ந்து அவர் தனக்கு நேர்ந்த கதியை நீதிமன்றத்தில் முறையிட முடிவு செய்து அதற்கான பணிகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வந்தார்.

ஸ்டார்பக்சில் வேலை செய்யும் ஊழியர் அலட்சியமாக எரியும் சூடான பானங்களில் ஒன்றை பாதுகாக்க தவறிவிட்டார். இதனால் அது மைக்கேல் மடியில் விழுந்தது என்று மைக்கேல் தரப்பு வழக்கறிஞரான நிக்கோலஸ் ரோவ்லி எழுத்துப்பூர்வ அறிக்கையில் தெரிவித்தார். மேலும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பலமுறை தோல் மாற்று அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டதாகவும், தீக்காயங்களால் ஏற்பட்ட சிதைவு, வலி, செயலிழப்பு மற்றும் உளவியல் ரீதியான பாதிப்புகளுடன் மைக்கேல் ஐந்து ஆண்டுகள் வாழ்ந்தார் என்றும் வழக்கறிஞர் கூறினார்.

இந்த நிலையில் டெலிவரி ஊழியருக்கு 50 மில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 433.49 கோடி) வழங்க லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டி நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். இந்த தீர்ப்பு குறித்து ஸ்டார்பக்ஸ் கார்ப்பரேட் கம்யூனிகேஷன்ஸ் இயக்குநர் ஜேசி ஆண்டர்சன் கூறும் போது, நீதிபதி அறிவித்துள்ள இழப்பீடு தொகை அதிகமாக இருந்தது என்றும், அதைக் குறைக்க நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார்.

இதையும் படிங்க: போர் நிறுத்தம் தோல்வி: காசாவில் பேரழிவை ஏற்படுத்திய இஸ்ரேல்- 130 பேர் பலி..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share