×
 

இப்படியும் ஒரு காதல்.. சிறையில் இருந்தபடி காதலிக்கு "ஜெட் விமானம்" பரிசளித்த காதலர்..

மோசடி வழக்கில் சிக்கி இருக்கும் பிரபலமான இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் தன்னுடைய காதலியும் பாலிவுட் நடிகையுமான ஜாக்குலின் பெர்னாண்டஸ்க்கு பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட ஜெட் விமானம்  (கல்ப் ஃ ஸ்ட்ரீம் ஜெட்) ஒன்றை பரிசளித்து அசத்தியிருக்கிறார்.

கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த சுகேஷ் சந்திரசேகர், நாடு முழுவதும் உள்ள பல்வேறு தொழிலதிபர்களிடம் பண மோசடி செய்தது, ஆள்மாறாட்டம் செய்தது உள்ளிட்ட வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சுகேஷ் சந்திரசேகருடன் சிறையில் அடைக்கப்பட்டிருந்த தொழில் அதிபர் ஷிவிந்தர் சிங்குக்கு ஜாமீன் வாங்கி தருவதாக சிறையிலேயே நட்பாக பேசியுள்ளார். மேலும், அவரின் மனைவியான அதிதி சிங்கிடம் ரூ.200 கோடியை சுகேஷ் சந்திரசேகர் மோசடி செய்தாக கூறப்படுகிறது. இந்த வழக்கிலும் கைதாகி  சுகேஷ் சிறையில் உள்ளார்.

இதனிடையே நடிகை ஜாக்குலினுடன் நெருக்கமான நட்பில் சுகேஷ் சந்திரசேகர் இருந்து வந்தார். அப்போது அவருக்கு கோடிக்கணக்கில் பரிசுகளையும் கொடுத்துள்ளார். மேலும், சிறையில் இருந்து கொண்டே ஜாக்குலினுக்கு ரூ.10 கோடி வரை பரிசுப் பொருட்களை சுகேஷ் வாங்கிக் கொடுத்ததாகவும் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. இந்நிலையில் நேற்றைய காதலர் தினத்தின்போது நடிகை ஜாக்குலினுக்கு ஜெட் விமானத்தை பரிசாக கொடுத்திருப்பதாகத் தெரிய வந்துள்ளது.

இதையும் படிங்க: மனக்கோட்டை கட்டி வைத்த பிரேமலதா… மனவலியை கொடுக்கும் எடப்பாடியார்… நெருக்கடியில் அதிமுக..!

மேலும் அந்த தனியார் ஜெட் விமானத்தில் காதலியின் பெயரையும் சுகேஷ் சந்திரசேகர் பொறித்துள்ளார். 'யூ ஆர் தி தி பெஸ்ட் வாலன்டைன்": அழகிய காதல் கடிதம். ஜாக்குலின் பெர்னாண்டஸ் என்பது ஆங்கிலத்தில் ஜேஎஃப் என்று ஆங்கிலத்தில் விமானத்தில் எழுதப்பட்டுள்ளது. மேலும், அவருக்கு ஒரு அழகான காதல் கடிதத்தையும் சுகேஷ் சந்திரசேகர் அனுப்பியுள்ளார். அதில் தனது காதலி ஜாக்லின் பெர்னாண்டஸை உலகிலேயே நீ தான் சிறந்த வாலன்டைன் என்று தொடங்கி, "இந்த காதலர் தினம் மிகவும் சிறப்பு வாய்ந்தது.

ஏனென்றால் நம் வாழ்வில் மீதமுள்ள காதலர் தினங்களை ஒன்றாக கழிப்பதிலிருந்து இது ஒரு படி தொலைவில் உள்ளது" என்று கூறியிருக்கிறார். "முதலில் ஒரு நிமிஷம்.. ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்; ஜாக்கி நான் உன்னை ரொம்பவே லவ் பண்றேன். நீ தான் உலகத்திலேயே பெஸ்ட் வேலன்டைன். உன்னை பைத்தியமா லவ் பண்றேன். உனக்கு தெரியுமா பேபி, நமக்கு காதலர் தினம் எவ்வளவு ஸ்பெஷல்.. நம்ம உறவு காதலர் தினத்தில் ஆரம்பிச்சது ..நாம இருக்கிற மாதிரியே ஒருவரை ஒருவர் மன்னித்து ஏற்றுக் கொண்ட நாள் இது.

 எப்பவும் நம்ம வாழ்க்கையில் ரொம்ப ஸ்பெஷல் நாளாக இருக்கும். இது வேலண்டைன்.. உன்னை எப்படி ஆச்சரியப்படுத்தாமல் இருக்க முடியும், பேபி. உன் காதலர் தின பரிசு பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட கல்ப் ஜெட் விமானம்" என்றும் கடிதத்தில் அவர் கூறியிருக்கிறார்.  கடிதத்தில் தொடர்ந்து அவர் "அன்பே நீ எப்போதும் வேலை, படப்பிடிப்பு களுக்காக உலகம் முழுவதும் பறந்து கொண்டிருக்கிறாய். இப்போது இந்த ஜெட் விமானத்துடன் உனது பயணம் விருப்பப்படி மிகவும் எளிதாகவும் வசதியாகவும் இருக்கட்டும். 

இந்த விமானத்திற்கான முழு வரியையும் செலுத்துவதன் மூலம் இது முழுமையான சட்டபூர்வமான பரிசாக இருக்கும். குற்றச்செயல்கள் மூலம் கிடைத்த வருமானத்தில் இதை வாங்கவில்லை" என்றும் கடிதத்தில் பகிர்ந்து இருக்கிறார் சுகாஷ் சந்திரசேகர்.

இதையும் படிங்க: பழனி டு திருப்பதிக்கு மீண்டும் பஸ் சேவை; ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் சொன்ன குட்நியூஸ்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share