×
 

#BREAKING: ஆஸ்திரேலியாவில் பயங்கரம்... துப்பாக்கி சூட்டில் 10 பேர் பலியான கொடூரம்... வலுக்கும் கண்டனம்...!

ஆஸ்திரேலியாவில் சிட்னி நகரில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 10 பேர் பலியான நிலையில் இஸ்ரேல் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள உலகப் புகழ்பெற்ற போண்டி கடற்கரையில் இன்று ஏற்பட்ட கொடூரமான துப்பாக்கிச் சூடு சம்பவம் அந்நாட்டையே உலுக்கியுள்ளது. ஹனுக்கா திருவிழாவின் முதல் நாளைக் கொண்டாடும் வகையில் சபாத் ஆஃப் போண்டி அமைப்பினர் ஏற்பாடு செய்திருந்த "சானுக்கா பை தி சீ" என்ற நிகழ்ச்சி போண்டி பார்க் பகுதியில் நடந்து கொண்டிருந்தது.

நூற்றுக்கணக்கான யூத சமூகத்தினர், குழந்தைகள் உட்பட கூடியிருந்த அந்த மகிழ்ச்சியான தருணத்தில் திடீரென துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தினர். ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள போண்டி கடற்கரையில் நிகழ்ந்த துப்பாக்கி சூட்டில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் இரண்டு பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிட்னி நகரில் உள்ள போண்டி கடற்கரையில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாக ஆஸ்திரேலிய பிரதமர் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியா கடற்கரையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு இஸ்ரேல் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: அநியாயம் நடக்குது தளபதி… கட்சியை விட்டே நீக்கிட்டாங்க… போராட்டத்தில் குதித்த தவெக தொண்டர்கள்…!

யூதர்களின் ஹனுக்கா பண்டிகையில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்தால் தங்கள் அதிர்ச்சி அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது. போண்டி கடற்கரையில் நடந்த துப்பாக்கி சூடு இஸ்ரேலுக்கு ஒரு தாங்க முடியாத துயரச் சம்பவமாக இருக்கிறது என இஸ்ரேல் தூதரகம் தெரிவித்துள்ளது. மேலும் யூத எதிர்ப்பு வன்முறையில் இருந்து யூத மக்களை பாதுகாக்க ஆஸ்திரேலியா அரசு தீர்க்கமாக செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளது. 

இதையும் படிங்க: 234 தொகுதிகளிலும் பயிலரங்கம்… வெற்றிக்கான அடித்தளம்… நயினார் நாகேந்திரன் உறுதி…!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share