இனிமே எல்லாம் இந்தியாமயம்!! அமெரிக்காவுக்கே நாம தான் சப்ளை! சீன நிறுவனத்தை கையகப்படுத்தியது டாடா!
சீனாவில் ஐபோன் உற்பத்தியை குறைத்து, இந்தியாவில் அதிகரிக்க , அந்த போன்களை தயாரிக்கும் ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டது.
அமெரிக்கா-சீனா இடையே நீடிக்கும் வர்த்தகப் போரின் பின்னணியில், ஆப்பிள் நிறுவனம் சீனாவில் நடைபெறும் ஐபோன் உற்பத்தியைக் குறைத்து, இந்தியாவில் அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. அமெரிக்காவில் விற்பனை செய்யப்படும் அனைத்து ஐபோன்களையும் 2026 இறுதிக்குள் இந்தியாவில் தயாரிக்க உள்ளதாக ஆப்பிள் சிஇஓ டிம் குக் தெரிவித்துள்ளார்.
இந்த இலக்கை வலுப்படுத்தும் வகையில், டாடா குழுமத்தின் டைட்டன் இன்ஜினியரிங் அண்ட் ஆட்டோமேஷன் நிறுவனம், சீனாவின் ஜஸ்டெக் பிரிசிஷன் நிறுவனத்தின் இந்தியப் பிரிவை 880 கோடி ரூபாய்க்கு (சுமார் 100 மில்லியன் டாலர்) தன்வசப்படுத்தியுள்ளது. இது ஆப்பிள் ஐபோன் பாகங்கள் சப்ளையராக செயல்படும் நிறுவனமாகும்.
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இந்தப் பரிவர்த்தனை முடிவடைந்ததாகவும், எச்.எஸ்.பி.சி. மற்றும் எச்.டி.எப்.சி. வங்கிகள் ஆலோசனைகளை வழங்கியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் தலைமையிடமுடைய ஜஸ்டெக் பிரிசிஷன் நிறுவனம், 2008 முதல் ஆப்பிள் ஐபோன் தயாரிப்பில் முக்கிய உதிரிபாகங்கள் வழங்கி வருகிறது.
இதையும் படிங்க: சீன அதிபர் ஜி ஜின்பிங் ஒரு ஜென்டில்மேன்! சீக்கிரமே மீட் பண்ணுவேன்! ஐஸ் வைக்கும் ட்ரம்ப்!
இதன் இந்தியப் பிரிவான ஜஸ்டெக் பிரிசிஷன் இண்டஸ்ட்ரி இந்தியா, 2019-ல் தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டது. இந்த நிறுவனம், ஃபாக்ஸ்கானுக்கு கம்ப்யூட்டர் நியூமரிக்கல் கண்ட்ரோல் (சிஎன்சி) இயந்திரங்கள் போன்ற துல்லியமான தொழில்துறை உபகரணங்களை வழங்கி வருகிறது.
ஏற்கனவே, டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம், பெகட்ரான் நிறுவனத்தின் இந்தியப் பிரிவில் 60 சதவீத பங்கை 1,650 கோடி ரூபாய்க்கு கையக் கொண்டது. இதன் மூலம், ஐபோன் தயாரிப்பின் அசெம்பிளி பிரிவில் டாடா ஈடுபட்டுள்ளது. இப்போது ஜஸ்டெக் கையக் கொள்ளல், ஐபோன் பாகங்கள் சப்ளை சங்கிலியில் டாடாவின் பங்கை மேலும் வலுப்படுத்தும்.
இது அடுத்தகட்ட வளர்ச்சியாக அரசியல், தொழில்துறை வட்டாரங்களில் பார்க்கப்படுகிறது. இதனால், இந்தியாவில் ஐபோன் உற்பத்தியில் டாடாவின் பங்கு கணிசமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆப்பிள் நிறுவனத்திற்கு இந்தியாவில் ஏற்கனவே மூன்று தொழிற்சாலைகள் உள்ளன. இதில் இரண்டு தமிழ்நாட்டிலும் (ஃபாக்ஸ்கான் நிர்வாகம்), ஒன்று கர்நாடகாவிலும் (டாடா நிர்வாகம்) உள்ளன. இன்னும் இரண்டு தொழிற்சாலைகள் தொடங்க உள்ளன.
சீனாவிலிருந்து உற்பத்தியை இந்தியாவிற்கு மாற்றுவதன் மூலம், அமெரிக்காவின் உயர் வரி, புவிசார் அரசியல் பதற்றங்கள் ஆகியவற்றைத் தவிர்க்க முயல்கிறது ஆப்பிள். இந்தியாவில் தற்போது ஃபாக்ஸ்கான் 2/3 ஐபோன் அசெம்பிளி செய்கிறது, டாடா 1/3 செய்கிறது. 2025 இறுதிக்குள் இந்தியாவில் உலக ஐபோன் உற்பத்தியில் 26% பங்கு இருக்கும் என நிபுணர்கள் கணிக்கின்றனர்.
இந்த முயற்சி இந்தியாவின் தொழில்துறை வளர்ச்சிக்கும், வேலைவாய்ப்புகளுக்கும் பெரும் வெற்றியை அளிக்கும். டாடா குழுமத்தின் இந்த அடி, சீனாவிலிருந்து சப்ளை சங்கிலியை இந்தியாவிற்கு மாற்றும் ஆப்பிளின் உத்தியை வலுப்படுத்துகிறது.
இதையும் படிங்க: வரி விதிப்போ? பொருளாதார தடையோ!! போரை நிறுத்த இது தீர்வாகாது!! ட்ரம்புக்கு சீனா பதில்!