×
 

ஆசிரியர் கையை போலீசார் உடைத்த புகார்... கடும் அதிருப்தி... சக ஆசிரியர்கள் தர்ணா...!

ஆசிரியர் கையை போலீசார் உடைத்ததாக கூறி சக ஆசிரியர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.

தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள் நீண்டகாலமாக "சம வேலைக்கு சம ஊதியம்" என்ற கோரிக்கையை முன்வைத்து போராடி வருகின்றனர். இந்தப் பிரச்னை கடந்த 16 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் ஒரு ஊதிய முரண்பாட்டால் உருவானது. 2009ஆம் ஆண்டு மே மாதம் 31ஆம் தேதிக்கு முன் பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கும், ஜூன் 1ஆம் தேதிக்குப் பிறகு சேர்ந்த ஆசிரியர்களுக்கும் இடையே அடிப்படை ஊதியத்தில் குறிப்பிடத்தக்க வித்தியாசம் உள்ளது.

ஒரே மாதிரியான பணி, ஒரே கல்வித் தகுதி இருந்தும், இந்த வேறுபாடு இருப்பதாக ஆசிரியர்கள் குற்றம்சாட்டுகின்றனர். இது ஏறத்தாழ 20,000 ஆசிரியர்களைப் பாதித்துள்ளது.இந்த முரண்பாடு ஊதிய ஆணைய மாற்றங்களால் ஏற்பட்டது. உச்ச நீதிமன்றத்தின் "சம வேலைக்கு சம ஊதியம்" என்ற தீர்ப்புக்கு எதிரானது என ஆசிரியர்கள் வலியுறுத்துகின்றனர்.

இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் (SSTA) இந்தக் கோரிக்கையை முன்னிறுத்தி பல ஆண்டுகளாக போராட்டங்களை நடத்தி வருகிறது. இன்று சென்னை எழும்பூரில் உள்ள மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகம் அருகே ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினர் அவர்களை குண்டுகட்டாக போலீசார் கைது செய்தனர்.

இதையும் படிங்க: எங்களுக்கு என்ன புத்தாண்டு? ஓயமாட்டோம்... 8வது நாளாக போராட்டத்தை தொடரும் ஆசிரியர்கள்...!

செய்து வாகனத்தில் ஏற்றும் போது ஆசிரியரின் கையை போலீசார் உடைத்ததாக புகார் எழுந்துள்ளது. போலீசார் அராஜகப்போக்குடன் செயல்படுவதாகவும் குற்றம் சாட்டினர். இதை எடுத்து கைது செய்ய தங்க வைக்கப்பட்ட மண்டபம் அருகேவும் ஆசிரியர்கள் போராடினர். அறவழியில் போராடும் தங்களை அச்சுறுத்துவதாக ஆசிரியர்கள் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

இதையும் படிங்க: கொந்தளிப்பில் இடைநிலை ஆசிரியர்கள்..!! சென்னையில் 4வது நாளாக தொடரும் போராட்டம்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share