×
 

#BREAKING: உலக டெஸ்ட் சாம்பியன் பட்டத்தை வென்றது தென் ஆப்பிரிக்கா... 2வது முறையாக சாதனை!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் சாம்பியன் பட்டத்தை தென் ஆப்பிரிக்கா அணி வென்றது.

லண்டன் லாட்ஸ் மைதானத்தில் நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவை ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணி வீழ்த்தியுள்ளது. முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 212 ரன்களும் தென்னாபிரிக்கா 138 ரன்களுக்கும் ஆல் அவுட் ஆனது. 74 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா 207 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 

282 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி ஐந்து விக்கெட் இழப்பிற்கு இலக்கை அடைந்து வென்றது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்று பவுமா தலைமையிலான தென்னாப்பிரிக்கா அணி வரலாறு படைத்துள்ளது. 

ஐசிசி தொடர்களில் தென் ஆப்பிரிக்கா அணி இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னதாக 1998 ஆம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் தென்ஆப்பிரிக்கா அண்ட் சாம்பியன் பட்டம் வென்றிருந்தது. ஐசிசி நாக் அவுட்டு போட்டிகளில் 15 தோல்வி அடைந்த தென்னாப்பிரிக்கா தற்போது வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

இதையும் படிங்க: 2000 ட்ரோன்கள் தாக்கும் - மிரட்டும் ஈரான்.. தெஹ்ரான் பற்றி எரியும் - எச்சரிக்கும் இஸ்ரேல்..!

இதையும் படிங்க: ஜெகன்மூர்த்தி MLA வீட்டில் போலீஸ் குவிப்பு...பதற்றம்.. பரபரப்பு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share