×
 

இந்தியா எங்களை தாக்கவில்லை.. பாக். குற்றச்சாட்டை மறுத்த ஆப்கானிஸ்தான் அரசு!!

தங்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் அளித்த புகார் தவறானது என ஆப்கானிஸ்தானை ஆளும் தாலிபான் அரசு தெரிவித்துள்ளது.

காஷ்மீரில் கடந்த 22 ஆம் தேதி பஹல்காமில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் அங்கு இருந்த சுற்றுலாப் பயணிகள் சுமார் 26 பேர் கொல்லப்பட்டனர். மேலும், பலர் காயமடைந்தனர். இதை அடுத்து பாகிஸ்தானுக்கு எதிராக அதிரடியான முடிவுகள் எடுக்கப்பட்டன. 

இதனால் இந்தியா பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்து வந்தது. இந்த சூழலில் இந்திய ராணுவம் 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டது. இந்த தாக்குதலில் இதில் 100 பயங்கரவாதிகள் வரை கொல்லப்பட்டனர்.

இதை அடுத்து இந்திய எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் ஜம்முவை குறிவைத்து பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல் நடத்தியது. இந்தியா மீது மீண்டும் கடந்த 8 ஆம் தேதி இரவு பாகிஸ்தான் தாக்குதலை மேற்கொண்டது. வெள்ளிக்கிழமை அதிகாலை வரை கடும் மோதல் ஏற்பட்டது. பாகிஸ்தானின் 8 ஏவுகணைகள் தடுக்கப்பட்டுள்ளன. பஞ்சாப் மாநிலம், பதான்கோட் விமான தளத்தில் தாக்குதல் நடத்த முயன்ற நிலையில், இந்திய விமானப் படை பதிலடியை கொடுத்துள்ளது.

இந்தியா மீதான பாகிஸ்தானின் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்திய எல்லை பகுதியில் வசிக்கும் அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்துவது, வழிபட்டு தலங்கள், பள்ளி, கல்லூரிகள், குடியிருப்புகள் என பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது.

இதையும் படிங்க: அதிகரிக்கும் போர் பதற்றம்... நிகழ்ச்சிகளில் ட்ரோன், பட்டாசு & ஏர் பலூனுக்கு தடை!!

இதற்கிடையே ஆப்கானிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் குற்றம்சாட்டியது. இதுமட்டுமின்றி இந்தியாவில் கடும் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் இந்தியாவின் மின் கட்டமைப்புகள், சைபர் பாதுகாப்பு வசதிகளை சேதப்படுத்திவிட்டதாகவும் பாகிஸ்தான் தெரிவித்திருந்தது. ஆனால் இவை அனைத்தும் உண்மைக்கு புறம்பானது என இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், ஆப்கானிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் வதந்தி பரப்பி வருகிறது. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஆப்கானிஸ்தான் மீது பல முறை தாக்குதல் நடத்தியது எந்த நாடு? என்பதை ஆப்கானிஸ்தான் மக்களுக்கு நினைவூட்ட வேண்டிய அவசியமில்லை என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

இந்தியாவில் கடும் சேதம் ஏற்பட்டுள்ளதாக பாகிஸ்தான் வதந்தி பரப்புகிறது. இந்தியாவின் மின் கட்டமைப்புகள், சைபர் பாதுகாப்பு வசதிகளை சேதப்படுத்திவிட்டதாக பாகிஸ்தான் பொய் சொல்கிறது. ஆப்கான் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக வெளியான தகவலும் உண்மைக்குப் புறம்பானது என்று தெரிவித்துள்ளார்.

அவரை தொடர்ந்து ஆப்கானிஸ்தானும் பாகிஸ்தானின் புகாரை மறுத்துள்ளது. ஆப்கானிஸ்தானை ஆளும் தாலிபான் அரசு, இந்தியா எங்கள் மீது தாக்குதல் நடத்தவில்லை. பாகிஸ்தானின் புகார் தவறானது. எங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக பாகிஸ்தான் கூறியது உண்மையில்லை என தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: ராஜ்நாத் சிங் - முப்படை தளபதிகளோடு பிரதமர் மோடி ஆலோசனை.. இன்று இரவு நடக்கபோவது என்ன?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share