CAA தான் அவங்க நோக்கம்..! இது தேர்தல் ஆணையத்தின் வேலையா? வெளுத்து வாங்கிய திருமா...!
எஸ் ஐ ஆர் பணியை எதிர்த்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திருமாவளவன் கலந்து கொண்டு உரையாற்றினார்.
இறந்தவர்கள், மாற்று இடத்திற்கு சென்றவர்கள், புதியவர்கள் என பல்வேறு விஷயங்களை கருத்தில் கொண்டு பெயர் திருத்தம், முகவரி மாற்றம் என வாக்காளர் திருத்தப் பணிகள் நடைபெறுவது வழக்கம். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியை தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் எதிர்கின்றன. காரணம் தேர்தல் ஆணையம் பாஜக அரசுக்கு துணையாக செயல்படுவதாகவும் வாக்காளர் திருத்த பணிகள் மூலம் பொதுமக்களின் வாக்குரிமை பறிக்கப்படும் என்ற குற்றம் சாட்டி வருகின்றனர்.
அது மட்டுமல்ல அது வாக்குத்திருட்டு நடைபெற்று இருப்பதாக மக்களவை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் பல்வேறு ஆதாரங்களை வெளியிட்டு பேசி வருகிறார். இருப்பினும் வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் நிச்சயம் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இந்த நிலையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி இரண்டாம் கட்டமாக 12 மாநிலங்களில் நடத்தப்பட உள்ளதாக தலைமை தேர்தல் ஆணையர் தெரிவித்தார்.
தமிழகத்தில் வாக்காளர் திருத்தப் பணிகள் நடந்து வரும் நிலையில், தமிழக அரசு கடுமையாக இதனை எதிர்த்து வருகிறது. திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் திமுக கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். சென்னை மிண்ட் பகுதியில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்தை கண்டித்து போராட்டம் நடைபெற்று வருகிறது. சென்னை மின்ட் பகுதியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டார். அப்போது கண்டன உரையாற்றினார்.
இதையும் படிங்க: ரோடு ஷோ தேவையே இல்ல... தடை பண்ணுங்க... திருமாவளவன் காட்டம்...!
வாக்காளர் சிறப்பு திருத்தம் குறித்து விவாதிக்க அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டிய முதல் மாநிலம் தமிழ்நாடு என்று தெரிவித்தார். வாக்காளர் பட்டியல் திருத்தம் என்பது அவ்வப்போது நடந்து கொண்டிருக்கும் ஒன்றுதான் என்றும் எஸ் ஐ ஆர் என்பது தேர்தல் ஆணையம் செய்ய வேண்டிய வேலைத்திட்டம் அல்ல எனவும் தெரிவித்தார். சி ஏ ஏ வை அமல்படுத்துவதற்கான மறைமுகத் திட்டம் என்று குற்றம் சாட்டினார்.
இதையும் படிங்க: குடி தான் எல்லாத்துக்கும் காரணம்..! பூரண மதுவிலக்கு கொண்டு வரணும்... விசிக வலியுறுத்தல்...!