×
 

சிறுமி பாலியல் வன்கொடுமை! காமுகனை பிடிப்பதில் என்ன அலட்சியம்? தவெக முற்றுகை போராட்டம்

சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளியை இதுவரை கைது செய்யவில்லை எனக் கூறி ஆரம்பாக்கம் காவல் நிலையத்தை தமிழக வெற்றி கழகத்தினர் முற்றுகையிட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே ஆரப்பாக்கத்தில் கடந்த சனிக்கிழமை 10 வயது சிறுமி ஒருவர் பள்ளி முடிந்து பாட்டி வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது, ஒரு நபர் அவரை கடத்தி அருகிலுள்ள தோப்பில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் நடந்துள்ளது. இந்த கொடூரச் சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. சிறுமி தப்பி, தனக்கு நேர்ந்த கொடுமையை பாட்டியிடம் தெரிவித்ததை அடுத்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

காவல்துறையினர் ஏற்கனவே இரண்டு தனிப்படைகளை அமைத்து விசாரணை நடத்தி வந்த நிலையில், மேலும் மூன்று கூடுதல் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. சிறுமி தற்போது நலமாக இருப்பதாகவும், குற்றவாளியை கைது செய்ய தீவிர விசாரணை நடைபெறுவதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்தச் சம்பவம் தமிழ்நாட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து பொதுமக்களிடையே கடும் அதிருப்தியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளியை விரைந்து பிடித்து தக்க தண்டனை வழங்க வேண்டும் என்று அரசியல் கட்சியினரும் பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: கோர்ட்டுக்கு போன தவெக கொடி நிறப் பிரச்சனை.. 2 வாரம் கெடு.. பதிலளிக்க விஜய்க்கு பறந்த நோட்டீஸ்..!

இந்த நிலையில், கும்மிடிப்பூண்டியை அடுத்த ஆரம்பாக்கத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய காமுகனை இதுவரை போலீசார் பிடிக்கவில்லை எனக் கூறி தமிழக வெற்றி கழகத்தினர் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் அலட்சியமாக செயல்படுவதாக கூறி ஆரம்பாக்கம் காவல் நிலையத்தை தமிழக வெற்றி கழகத்தினர் முற்றுகையிட்டனர். அப்போது காவல் நிலைய வாசலிலேயே தடுத்து நிறுத்தப்பட்டதால் போலீசாருடன் வாக்குவாதம் செய்தனர். தொடர்ந்து போலீசாரையும் மீறி உள்ளே நுழைந்து சென்று காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். 

இதையும் படிங்க: ஆதவ் அர்ஜுனாவுக்கு கொலை மிரட்டல்.. போலீசுக்கு பறந்த புகார்.. வசமாக சிக்கிய ஒருவர்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share