F-1 விசாவில் அதிரடி மாற்றம்... இந்திய மாணவர்கள் தலையில் இடியை இறக்கிய டிரம்ப்... 3 அதிரடி கட்டுப்பாடுகள்...!
அமெரிக்காவோ அவர்களது நாட்டிற்கு இந்தியர்கள் வரவேக்கூடாது என்பது போல் குடியேற்ற விதிமுறைகளை நாளுக்கு நாள் கடினமாக்கி வருகிறது.
தேசிய பாதுகாப்பு என்ற பெயரில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எடுக்கும் நடவடிக்கைகள் அமெரிக்கர்களையே கடுப்பில் ஆழ்த்தியுள்ளது. தற்போது சர்வதேச மாணவர்களை சிரமப்படுத்தும் வகையில் டிரம்ப் கொண்டு வந்துள்ள புதிய விதிகளுக்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. அமெரிக்காவில் உள்ள முன்னணி பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி சங்கங்கள் அந்த விதிமுறைகளை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன. அவர்களது எதிர்ப்பை பற்றி தான் கவலைப்படவில்லை என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
அமெரிக்காவில் படிக்கும் இந்திய மாணவர்களுக்கு, உயர்கல்வி பெற்று, நல்ல வேலையில் சேர்ந்து, அங்கேயே குடியேற வேண்டும் என்ற நோக்கத்துடன், கடன் வாங்கி லட்சக்கணக்கில் கட்டணம் செலுத்தி படிக்கிறார்கள். ஆனால் அமெரிக்காவோ அவர்களது நாட்டிற்கு இந்தியர்கள் வரவேக்கூடாது என்பது போல் குடியேற்ற விதிமுறைகளை நாளுக்கு நாள் கடினமாக்கி வருகிறது. குறிப்பாக, சமீபத்தில் மாணவர் அல்லது F-1 விசா வைத்திருப்பவர்களுக்கு எதிராக 3 புதிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவில் படித்து முடித்தால், வாழ்க்கை செட்டில் ஆகிவிடும் என நினைத்த மாணவர்களுக்கு, இப்போது அவர்களுடைய பிளானையே புரட்டிப்போடும் அளவிற்கு அதிரடி வேலையில் அமெரிக்கா இறங்கியுள்ளது.
படிப்பிற்கான கால அவகாசம் குறைப்பு:
முன்னதாக, F-1 விசாவில் அமெரிக்கா சென்ற மாணவர்கள், தங்கள் படிப்பிற்கான கால அவகாசம் முடியும் வரை சட்டப்பூர்வமாக அங்கேயே தங்கியிருக்கலாம். ஆனால் அதற்கு தற்போது அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை (DHS)முற்றுப்புள்ளி வைத்துள்ளது. புதிய விதியின்படி, மாணவர்களுக்கு அதிகபட்சமாக 4 ஆண்டுகளுக்கான விசா மட்டுமே வழங்கப்படும். நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு படிப்பு முடிக்கப்படாவிட்டால், அவர்கள் மீண்டும் USCIS-க்கு விண்ணப்பித்து நீட்டிப்பு பெற வேண்டும். ஒவ்வொரு முறையும் நீட்டிப்பு பெறுவதற்கு எந்த உத்தரவாதமும் இல்லாததால், நீண்ட படிப்புகள் அல்லது ஆராய்ச்சி செய்யும் PhD மாணவர்களுக்கு இது ஒரு பெரிய பிரச்சனையாக மாறியுள்ளது.
இதையும் படிங்க: புயல் வருதா? தற்போதைய நிலவரம் என்ன?... இந்திய வானிலை ஆய்வு மையம் முக்கிய தகவல்...!
கட்டாயம் நேரில் வர வேண்டும்:
மாணவர்கள் தங்கள் விசாவைப் புதுப்பிக்க அல்லது சில தகுதிகளைப் பூர்த்தி செய்திருந்தால், தூதரகத்திற்குச் செல்ல வேண்டியதில்லை என்ற விதிமுறை நடைமுறையில் இருந்தது. டிராப்பாக்ஸ் சேவை எனப்படும் நேர்காணல் விலக்கு மூலம் ஆவணங்களை அனுப்பினாலே போதும். இருப்பினும், செப்டம்பர் 2025 க்குப் பிறகு வெளிவந்த புதிய விதிகளின்படி, பெரும்பாலான விசா நேர்காணல் விலக்குகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதாவது இனி விசா சம்பந்தமாக ஒரு சின்ன வேலை இருந்தாலும் மாணவர்கள் நேரில் தூதரகம் சென்று நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்தக் கடுமையான கொள்கை, சந்திப்புகளுக்காக நீண்ட நேரம் காத்திருக்க வழிவகுத்துள்ளது. குறிப்பாக இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்குத் திரும்ப விரும்பும் மாணவர்களுக்கு, திட்டமிடுவதில் கடுமையான தாமதங்கள் ஏற்படும் அபாயம் உள்ளது.
F-1 முதல் O-1 மாற்றம்:
விசா விதிமுறைகள் கடுமையாகி வரும் வேளையில், கும்மிருட்டில் கிடைத்த சிறிய வெளிச்சம் போல ஒரு புதிய வாய்ப்பு கிடைத்துள்ளது. H-1B விசாவிற்குப் பதிலாக, மிகவும் திறமையான மற்றும் திறமையானவர்கள் O-1 விசாவிற்கு விண்ணப்பிக்கலாம். இந்த விசாவில் H-1B போன்ற விதிமுறைகள் இல்லை. விருதுகள், ஆராய்ச்சிக் கட்டுரைகள் மற்றும் நல்ல சம்பளம் போன்ற உங்கள் துறையில் அங்கீகாரம் இருந்தால், நீங்கள் F-1 இலிருந்து O-1 க்கு நேரடியாக மாறலாம். அசாதாரண திறமை கொண்ட ஒரு சில மாணவர்களுக்கு மட்டுமே இது ஒரு பெரிய பிளஸ் பாயிண்ட். இருப்பினும், ஒட்டுமொத்தமாக, அமெரிக்க கனவு இப்போது மிகவும் கடினமாகிவிட்டது.
இதையும் படிங்க: சூதானமா இருங்க மக்களே... 3வது நாளாக பாய்ந்து வரும் வெள்ளம்... வெளியானது முக்கிய எச்சரிக்கை...!