திரிச்சூர் விபத்து பிரதமர் மோடி இரங்கல்! உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ரூ. 2 லட்சம் நிவாரணம் அறிவிப்பு!
பட்டாசு விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தாருக்கு ரூ.2 லட்சம் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவிப்பு.
கேரள மாநிலம் திரிச்சூர் மாவட்டம் மண்டதிக்கூடு பகுதியில் இன்று மதியம் ஏற்பட்ட பயங்கரப் பட்டாசு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 13-ஆக உயர்ந்துள்ள நிலையில், மத்திய அரசு சார்பில் நிவாரண உதவிகளையும் அவர் அறிவித்துள்ளார்.
விபத்து குறித்துப் பிரதமர் அலுவலகம் (PMO) தனது எக்ஸ் (X) தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கேரளாவின் திரிச்சூர் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழப்புகள் ஏற்பட்டது குறித்துக் கேட்டு மிகுந்த மனவேதனை அடைந்தேன். தங்களது அன்புக்குரியவர்களை இழந்து வாடும் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடையப் பிரார்த்திக்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குப் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து (PMNRF) நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ. 2 லட்சம் வழங்கப்படும். விபத்தில் காயம் அடைந்தவர்களுக்குத் தலா ரூ. 50,000 வழங்கப்படும் எனப் பிரதமர் அறிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கேரளாவின் திரிச்சூர் பூரம் பட்டாசு குடோனில் பயங்கர வெடி விபத்து! 13 பேர் உயிரிழப்பு!
பலி எண்ணிக்கை: விபத்தில் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர். காயமடைந்த 20-க்கும் மேற்பட்டோரில் 5 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகக் கேரள மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் (KSDMA) தெரிவித்துள்ளது. இவர்களுக்குத் திரிச்சூர் மருத்துவக் கல்லூரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கேரள மாநில அரசும் முதற்கட்ட அவசரத் தேவைகளுக்காகத் திரிச்சூர் மாவட்ட ஆட்சியருக்கு ரூ. 50 லட்சம் நிதியை ஒதுக்கியுள்ளது.
திரிச்சூர் பூரம் விழா நடைபெற இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், பிரதமரின் இந்த உடனடி நிவாரண அறிவிப்பு பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குச் சிறு ஆறுதலாக அமைந்துள்ளது.
இதையும் படிங்க: பாஜக சொல்றது எல்லாமே பொய்..!! மோடி ஒரு TERRORIST..!! கொந்தளித்த கார்கே..!!