×
 

உழைப்பிற்கு கிடைத்த அங்கீகாரம்..! டூரிஸ்ட் ஃபேமிலி படம் ஆஸ்கர் பெறும்... சீமான் வாழ்த்து..!

டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் குழுவிற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

2026-ம் ஆண்டு உலக திரைப்பட ரசிகர்களுக்கு மிக முக்கியமான தருணங்களில் ஒன்றாகக் கருதப்படும் 98-வது ஆஸ்கார் விருதுவிழா மார்ச் மாதம் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற உள்ளது. ஹாலிவுட் மற்றும் உலக சினிமா விழாக்களில் மிகவும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் இந்த விழா, ஒவ்வொரு ஆண்டும் உலகின் சிறந்த படைப்புகளை கௌரவிக்கும் வகையில் வழங்கப்படுகிறது.

இதற்கான முன்னேற்பாடுகள் துவங்கியுள்ள நிலையில், விருதுகளுக்கான தகுதியுடைய படங்களின் பட்டியலும் அகாடமி அதிகாரிகளால் வெளியிடப்பட்டுள்ளது. ஆஸ்கார் அகாடமி அறிவித்திருப்பது போல, 2026-ம் ஆண்டிற்கான விருதுகளுக்கான தகுதிப்பட்டியலில் 201 திரைப்படங்கள் அடங்கியுள்ளன. இதில் தமிழ் சினிமாக்கு பெருமையளிக்கும் வகையில், சசிகுமார் இயக்கத்தில் உருவான 'டூரிஸ்ட் ஃபேமிலி' திரைப்படமும் இடம் பெற்றுள்ளது.

டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் 98வது ஆஸ்கர் விருதிற்கான சிறந்த திரைப்படத்திற்கான பொதுப் பட்டியலில்உலக அளவில் தேர்வான 201 படங்களில் ஒன்றாகவும், இந்திய அளவில் தேர்வான 5 படங்களில் ஒன்றாகவும் தேர்வாகி இருப்பது மிகுந்த மகிழ்ச்சியையும், பெருமிதத்தையும் அளிக்கிறது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: திராவிட குப்பையை அடுப்பில் போட்டு தீந்தமிழ் பொங்கல் வையுங்கள்... சீமான் விமர்சனம்...!

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவர் மனதிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் இயல்பான அழகியலுடன் மிக நேர்த்தியாக டூரிஸ்ட் பேமிலி திரைப்படத்தை இயக்கிய 25 வயது இளம் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த்தின் அளப்பரிய கலைத்திறனுக்கும், சசிக்குமார், சிம்ரன், எம்.எஸ்.பாஸ்கர், யோகிபாபு ஆகியோரின் ஒப்படைப்பு மிக்க நடிப்பிற்கும், படக்குழுவினரின் கடின உழைப்பிற்கும் கிடைத்துள்ள மாபெரும் அங்கீகாரமாகவே இத்தேர்வினை பார்ப்பதாக கூறினார். உலகத்தமிழ்ச்சொந்தங்களின் ஒருமித்த ஆதரவுடன் 'டூரிஸ்ட் பேமிலி திரைப்படம்' சிறந்த திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருதினை வென்றெடுக்க வாழ்த்துவதாக கூறினார். 

இதையும் படிங்க: வெளிநாட்டில் பயின்ற மருத்துவப் பட்டதாரிகள்... கோரிக்கையை கேளுங்க... ஆதரவு குரல் கொடுத்த சீமான்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share