கொலம்பியாவில் பயங்கரம்: புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விழுந்து நொறுங்கிய விமானம் - 15 பேர் பலி!
“காட்டாடும்பிரே பகுதியில் நேர்ந்த கோர விபத்து” - கொலம்பிய எம்.பி மற்றும் அரசியல் தலைவர்கள் உயிரிழந்த சோகம்!
தென் அமெரிக்க நாடான கொலம்பியாவின் வடகிழக்குப் பகுதியில் உள்ள காட்டாடும்பிரே மலைப்பகுதியில் நிகழ்ந்த கோர விமான விபத்தில், அதில் பயணித்த 15 பேரும் உடல் சிதறி உயிரிழந்தனர். அரசுக்குச் சொந்தமான சடெனா நிறுவனத்தின் சிறிய ரக விமானம் இந்த விபத்தில் சிக்கியது.
குக்குட்டா நகரிலிருந்து ஓகானா நோக்கி புறப்பட்ட பீச்கிராஃப்ட் 1900 ரக விமானம், வானில் பறக்கத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே கட்டுப்பாட்டு அறையுடனானத் தொடர்பை இழந்தது. இந்த விமானத்தில் 2 ஊழியர்கள் மற்றும் 13 பயணிகள் என மொத்தம் 15 பேர் பயணித்தனர். தேடுதல் பணியின் இறுதியில், குராசிகா என்ற கிராமப்புறப் பகுதியில் விமானத்தின் சிதிலமடைந்த பாகங்கள் கண்டெடுக்கப்பட்டன. அதில் பயணித்த அனைவரும் உயிரிழந்ததாகக் கொலம்பியா விமானப் போக்குவரத்துத் துறை உறுதி செய்துள்ளது.
இந்த விபத்தில் கொலம்பிய காங்கிரஸ் உறுப்பினர் டியோஜெனெஸ் குயின்டெரோ மற்றும் காங்கிரஸ் வேட்பாளர் கார்லோஸ் சால்சிடோ ஆகியோர் உயிரிழந்தது அந்த நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விபத்து நடந்த பகுதியில் நிலவிய மோசமான வானிலை அல்லது தொழில்நுட்பக் கோளாறு விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் என முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், விபத்துக்கானத் துல்லியமானக் காரணத்தைக் கண்டறிய உயர்மட்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்கும் பணிகள் சவாலான மலைப்பகுதியில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இதையும் படிங்க: விமான விபத்தில் அஜித் பவார் மரணம்..!! வெளியான பகீர் சிசிடிவி..!! 3 நாட்கள் துக்கம் அனுசரிப்பு..!!
இதையும் படிங்க: நூலிழையில் தப்பிய 192 பயணிகள்! ஓடுபாதையிலேயே நின்ற ஸ்பைஸ்ஜெட் விமானம்!