2 ஆண்டுகளாக இரட்டை இலக்க வளர்ச்சி..! இதுதான் திராவிட மாடல்..! TRB ராஜா பெருமிதம்..!
இரண்டு ஆண்டுகளாக இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சி அடைந்து இருப்பதாக TRB ராஜா கூறியுள்ளார்.
தமிழ்நாட்டின் தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, திராவிட மாடல் ஆட்சியின் கீழ் கடந்த சில ஆண்டுகளில் மாநிலம் கண்டுள்ள பொருளாதார முன்னேற்றத்தைப் பற்றி பெருமிதத்துடன் பேசியுள்ளார். மத்திய அரசின் தரவுகளின்படி 2024-25 நிதியாண்டில் தமிழ்நாட்டின் உண்மையான பொருளாதார வளர்ச்சி விகிதம் 11.19 சதவீதமாக இருந்தது.
இது 14 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இரட்டை இலக்க வளர்ச்சியை எட்டியதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார். இந்தியாவில் பெரிய மாநிலங்களில் தமிழ்நாடு மட்டுமே இந்த அளவிலான இரட்டை இலக்க வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது என்று அவர் வலியுறுத்தினார்.
அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா இந்த வளர்ச்சியை சாதாரணமான ஒன்றாகக் கருதவில்லை. இது திட்டமிட்ட முன்னேற்றம் என்பதையே நிரூபிக்கிறது என்று கூறினார். திராவிட மாடல் ஆட்சியின் அடிப்படையான கொள்கைகள் சமூக நீதி, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, பெண்கள் முன்னேற்றம், கல்வி மற்றும் மருத்துவத் துறைகளில் முதலீடு இவை அனைத்தும் ஒன்றிணைந்து பரவலாக்கப்பட்ட வளர்ச்சியை உருவாக்கியுள்ளன என்று அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
இதையும் படிங்க: சென்னை கோட்டை திமுகவுக்கு தான்..! கி.வீரமணி திட்டவட்டம்..!
வெறும் புள்ளிவிவர வெற்றி அல்ல, இது திராவிட மாடல் வளர்ச்சியின் வெற்றிக்கான சாட்சி என்று அழுத்தம் திருத்தமாகச் சொன்னார்.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த ஆட்சி, உள்கட்டமைப்பு வசதிகள், தொழில் முதலீடுகள், ஏற்றுமதி வளர்ச்சி ஆகியவற்றில் கவனம் செலுத்தி வருவதாக அமைச்சர் குறிப்பிட்டார். குறிப்பாக, இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் வளர்ச்சி பரவலாக்கப்பட்டுள்ளது. இது வேலைவாய்ப்பை அதிகரிப்பதோடு, அனைத்து பிரிவு மக்களுக்கும் பயனளிக்கும் வகையில் அமைந்துள்ளது.
இதையும் படிங்க: கொடைக்கானலில் நடைப்பயிற்சி சென்ற முதல்வர்..! செல்பி எடுத்து மக்கள் மகிழ்ச்சி..!