×
 

NO PLASTICS.. மரங்களின் மாநாட்டில் தயவு செஞ்சு விதிகளை கடைப்பிடிங்க! சீமான் அறிவுறுத்தல்..!

மரங்களின் மாநாட்டிற்கு வருகை தரும் உறவுகள் அனைவரும் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என சீமான் வலியுறுத்தினார்.

நாம் தமிழர் கட்சியின் சார்பில் நடைபெற உள்ள மரங்களின் மாநாடு, தமிழ்நாட்டின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் இயற்கை வளங்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் ஒரு முக்கியமான நிகழ்வாக அமையவிருக்கிறது. இந்த மாநாடு, கட்சியின் சுற்றுச்சூழல் பாசறையின் முயற்சியால், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் ஆகஸ்டு 30 அன்று திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே அருங்குளம் கிராமத்தில் நடைபெற உள்ளது. மரங்களோடு பேசுவோம் மரங்களுக்காகப் பேசுவோம் என்ற கருப்பொருளை முன்னிறுத்தி இந்த மாநாடு நடத்தப்படுகிறது. 

இது, மரங்களின் முக்கியத்துவத்தையும், அவற்றின் உரிமைகளையும், சுற்றுச்சூழல் பாதுகாப்பில் அவை ஆற்றும் பங்கையும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த மாநாடு, கட்சியின் உயிர்மநேய அரசியல் தத்துவத்தின் ஒரு பகுதியாக, பேசும் திறனற்ற உயிர்களான மரங்களைப் பாதுகாப்பதற்காகவும், அவற்றின் உரிமைகளை மீட்டெடுக்கவும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த மாநாட்டின் முக்கிய நோக்கம், வளர்ச்சி என்ற பெயரில் மரங்கள் வெட்டப்படுவதையும், இயற்கை வளங்கள் சுரண்டப்படுவதையும் எதிர்ப்பது ஆகும். தமிழ்நாட்டில் பல ஆண்டுகளாக வளர்ந்த மரங்கள் அரசு மற்றும் தனியார் திட்டங்களால் அழிக்கப்படுவதை எதிர்த்து, நாம் தமிழர் கட்சி தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறது. உதாரணமாக, வடலூர் வள்ளலார் பெருவெளியில் மரங்கள் வெட்டப்படுவதற்கு எதிராக சீமான் கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்திருந்தார். இந்த மாநாடு, இத்தகைய சுற்றுச்சூழல் அழிவுக்கு எதிரான மக்களின் குரலை ஒருங்கிணைத்து, மரங்களைப் பாதுகாக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தும்.

இதையும் படிங்க: கள்ளச்சாராயம் குடிச்சு செத்தா ரூ.10 லட்சம்! இறந்து போன அரசு மருத்துவர் கண்ணுக்கு தெரியலையா? விளாசிய சீமான்..!

இதற்கு முன்பு ஜூலை 10 அன்று மதுரை விராதனூரில் நடைபெற்ற ஆடு, மாடுகளின் மாநாடு மூலம், மேய்ச்சல் நிலங்களின் உரிமைகளை வலியுறுத்தியது போலவே, இந்த மாநாடும் மரங்களின் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் சீரழிவை எதிர்க்கும் ஒரு முக்கியமான முயற்சியாக அமையும். ஆகஸ்ட் 30 ஆம் தேதி நடைபெறும்b மரங்களின் மாநாட்டுக்கு வரும் நாம் தமிழர் கட்சியினருக்கு சில அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. நெகிழிப் பொருட்கள் எடுத்து வருவதை தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

தங்களுக்கான குடிநீர் குடுவையை தாங்களே எடுத்து வர வேண்டும் என்றும் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய நெகிழிப் பொருட்களை எடுத்து வருவதை தவிர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளது. நெகிழிப் பொருட்கள் அனைத்தும் நிகழ்வு நடைபெறும் இடத்திற்கு முன்னதாகவே நுழைவு வாயிலில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு ஒருங்கிணைப்பு குழுவால் பெற்றுக் கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநாட்டிற்கு வருகை தரும் அனைவரும் நெகிழிப் பொருட்கள் பயன்பாடு இல்லாத மரங்களின் மாநாட்டை நிகழ்த்தி காட்ட உறுதி ஏற்கும் என்றும் அதற்கான அறிவிப்புகளை பின்பற்ற வேண்டும் என்றும் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தி உள்ளார்.

இதையும் படிங்க: அணில் ஏன் 'அங்கிள் அங்கிள்' என கத்துகிறது - விஜயை மீண்டும் சீண்டிய சீமான்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share