×
 

இன்னும் 60 நாள்!! ஹார்முஸை கடக்க கப்பல்களுக்கு எந்த கட்டணம் கிடையாது! அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு!

போர்நிறுத்தக் காலத்தில் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் கப்பல்களுக்கு சுங்க கட்டணம் கிடையாது என அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.

ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் கப்பல்களுக்கு போர்நிறுத்தக் காலத்தில் சுங்க கட்டணம் வசூலிக்கப்படாது என அமெரிக்க அதிபர் Donald Trump அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு சர்வதேச கப்பல் போக்குவரத்து மற்றும் மத்திய கிழக்கு அரசியல் சூழலில் கவனத்தை பெற்றுள்ளது.

அதிபர் டிரம்ப் தனது சமூக வலைதளப் பதிவில், தற்போது அமலில் உள்ள 60 நாள் போர்நிறுத்த காலத்தின் போது ஹார்முஸ் ஜலசந்தியை பயன்படுத்தும் கப்பல்களுக்கு எந்த விதமான சுங்கக் கட்டணமும் விதிக்கப்படாது என தெரிவித்துள்ளார். ராஜதந்திர பேச்சுவார்த்தைகள் தொடரும் வரை, கப்பல் போக்குவரத்து கூடுதல் கட்டணங்கள் இன்றி நடைபெறும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், போர்நிறுத்தக் காலம் முடிந்த பின்னரும் உடனடியாக சுங்கக் கட்டணங்கள் அமலுக்கு வராது என்றும், நிலைமையை அமெரிக்க அரசு தொடர்ந்து கண்காணிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: அதிபர் ட்ரம்ப் - பிரதமர் மோடி சந்திப்பை விமர்சிக்கும் காங்.,! பாராட்டும் சசிதரூர்! மீண்டும் புகைச்சல்!

அதே நேரத்தில், நடைபெற்று வரும் அமைதி பேச்சுவார்த்தைகள் பரந்த ஒப்பந்தத்தை எட்டத் தவறினால், எதிர்காலத்தில் கட்டணங்கள் விதிப்பது குறித்து பரிசீலிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மத்திய கிழக்கு பகுதியில் பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மையை உறுதி செய்வதில் அமெரிக்கா மேற்கொள்ளும் செலவுகளுக்கான இழப்பீடாக இதுபோன்ற கட்டணங்கள் இருக்கலாம் எனவும் டிரம்ப் தனது பதிவில் தெரிவித்துள்ளார். இதனால் சர்வதேச எண்ணெய் மற்றும் கப்பல் போக்குவரத்து சந்தைகளில் தாக்கம் ஏற்படக்கூடும் என பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

ஹார்முஸ் ஜலசந்தி உலக எண்ணெய் போக்குவரத்தில் முக்கியமான பாதையாக கருதப்படும் நிலையில், அங்கு விதிக்கப்படும் எந்தவொரு கொள்கை மாற்றமும் உலகளாவிய எரிசக்தி சந்தையில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இந்த முடிவு, தற்காலிக நிவாரணமாக இருந்தாலும், எதிர்கால அரசியல் பேச்சுவார்த்தைகளில் முக்கியமான அழுத்தமாக மாறக்கூடும் என சர்வதேச வல்லுநர்கள் மதிப்பிடுகின்றனர்.

இதையும் படிங்க: இவ்வளவு நாள் ஆகும்னு நான் நினைச்சு பாக்கல!! எனக்கு ஆச்சரியமாக இருக்கு! அதிபர் ட்ரம்ப் பேச்சு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share