×
 
☰

“ஜெலன்ஸ்கி பதவி விலக வேண்டிய நேரம் வந்துவிட்டது!” அதிபர் டிரம்ப் அதிரடி கருத்து! உக்ரைனில் பரபரப்பு!

ரஷ்யாவுக்கு கிடைக்கும் எரிபொருள் வருவாய், போரைத் தொடர அந்நாட்டுக்கு உதவக்கூடும் என்று ஜெலன்ஸ்கி விமர்சித்துள்ளார். இதனால், அமெரிக்கா - உக்ரைன் இடையிலான உறவில் மேலும் பதற்றம் உருவாகியுள்ளது.

வாஷிங்டன்: ரஷ்யாவுடனான போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான ஒப்பந்தத்தை மேற்கொள்ள உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி தவறிவிட்டதாகக் குற்றம்சாட்டிய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், உக்ரைனுக்கு புதிய அதிபர் தேவைப்படும் நேரம் வந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார். அவரது இந்தக் கருத்து சர்வதேச அரசியல் வட்டாரங்களில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2022-ம் ஆண்டு தொடங்கிய ரஷ்யா - உக்ரைன் போர் நான்கு ஆண்டுகளை நெருங்கியுள்ள நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே அமைதியை ஏற்படுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால், போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகளில் இதுவரை உறுதியான முன்னேற்றம் ஏற்படவில்லை.

ஜெலன்ஸ்கி மீது டிரம்ப் கடும் விமர்சனம்

வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், தாம் 2022-ம் ஆண்டில் அமெரிக்க அதிபராக இருந்திருந்தால் இந்தப் போர் தொடங்கியிருக்காது என்று கூறினார். மேலும், போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான வாய்ப்புகள் இருந்தும் ஜெலன்ஸ்கி அவற்றைப் பயன்படுத்தவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

இதையும் படிங்க: இந்த முறையும் கிடைக்கல!! அமைதிக்கான நோபல் பரிசு சர்ச்சை: நார்வே மீதும் பரிசுக் குழு மீதும் டிரம்ப் தாக்கு!

உக்ரைன் மக்கள் தங்களது நாட்டுக்கு புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டதாகவும் டிரம்ப் தெரிவித்தார். போரின் பாதிப்புகள் மற்றும் அமைதி ஒப்பந்தம் தொடர்பான கருத்து வேறுபாடுகளுக்கு மத்தியில், அவரது இந்தக் கருத்து உக்ரைன் அரசுக்கு அரசியல் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்ய எண்ணெய் ஒப்பந்தத்தால் சர்ச்சை

இதற்கிடையே, அமெரிக்காவில் எரிபொருள் விலை உயர்வு மற்றும் விநியோக நெருக்கடியைக் கட்டுப்படுத்தும் நோக்கில் ரஷ்யாவிடமிருந்து டீசல் பெறுவதற்கான ஒப்பந்தத்தை டிரம்ப் மேற்கொண்டுள்ளார். ரஷ்ய எரிபொருள் ஏற்றுமதி மீதான கட்டுப்பாடுகளைத் தளர்த்திய இந்த நடவடிக்கை உக்ரைன் தரப்பில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்யாவுக்கு கிடைக்கும் எரிபொருள் வருவாய், போரைத் தொடர அந்நாட்டுக்கு உதவக்கூடும் என்று ஜெலன்ஸ்கி விமர்சித்துள்ளார். இதனால், அமெரிக்கா - உக்ரைன் இடையிலான உறவில் மேலும் பதற்றம் உருவாகியுள்ளது.

ஜெலன்ஸ்கியின் பதில் என்ன?

ரஷ்யாவே போருக்குக் காரணம் என்று வலியுறுத்தியுள்ள ஜெலன்ஸ்கி, உக்ரைனின் எரிசக்தி கட்டமைப்புகள் மீதான தாக்குதல்களை ரஷ்யா நிறுத்தினால், ரஷ்ய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீதான தாக்குதல்களைத் தாங்களும் நிறுத்தத் தயாராக இருப்பதாகக் கூறியுள்ளார்.

மேலும், ரஷ்யா 60 நாட்கள் போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டால், உக்ரைனில் தேர்தல் நடத்த ஏற்பாடு செய்யத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், போர் நிறுத்தம் குறித்த பேச்சுவார்த்தைகள் எந்த அளவுக்கு முன்னேறும், அமெரிக்காவின் புதிய அணுகுமுறை அமைதி முயற்சிகளுக்கு உதவுமா என்பது சர்வதேச அளவில் கவனிக்கப்படும் முக்கியக் கேள்விகளாக உள்ளன.

இதையும் படிங்க: இந்தியாவுக்கு ஒரு நியாயம், அமெரிக்காவுக்கு ஒரு நியாயமா? ரஷ்ய டீசல் விவகாரத்தில் டிரம்ப் அறிவிப்பால் சர்ச்சை!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share