×
 

பேச்சுவார்த்தைக்கு போக வேண்டாம்! அமெரிக்கா - ஈரான் போர் நிறுத்தம்! முட்டுக்கட்டை போடும் ட்ரம்ப்!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான நீண்ட கால பகைமைக்கு முற்றுப்புள்ளி வைக்க அமைதி பேச்சு வாய்ப்பு வழங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பேச்சு நடத்த அமெரிக்க பிரதிநிதிகள் செல்ல வேண்டாம் என அதிபர் டிரம்ப் உத்தரவிட்டதால், அதில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது.

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான நீண்டகால பகைமைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வாய்ப்பாகக் கருதப்பட்ட இரண்டாம் கட்ட அமைதிப் பேச்சு, கடைசி நேரத்தில் அதிபர் டிரம்ப் உத்தரவால் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெறவிருந்த இந்த ரகசியப் பேச்சுக்கு அமெரிக்க சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காப் மற்றும் டிரம்பின் மருமகன் ஜாரெட் குஷ்னர் ஆகியோர் செல்ல திட்டமிடப்பட்டிருந்தனர். ஆனால், பேச்சு தொடங்கும் முன்பே டிரம்ப் இந்தப் பயணத்தை ரத்து செய்தார். 

சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், “ஈரான் தலைவர்களிடையே பெரும் அதிகாரப் போட்டியும் குழப்பமும் நிலவுகிறது. யாருக்கு அதிகாரம் இருக்கிறது என்பதே அவர்களுக்குத் தெரியவில்லை. இந்தப் போரில் அமெரிக்காவின் கையே ஓங்கியுள்ளது. பேச்சு நடத்த விரும்பினால் ஈரான் எங்களை அழைக்கட்டும்” என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: மூனே நாள்தான்!! ஈரானின் எண்ணெய் கட்டமைப்புகள் வெடித்து சிதறும்!! அதிபர் ட்ரம்ப் வார்னிங்!

ஈரான் தரப்போ, அமெரிக்காதான் முதலில் இறங்கி வர வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளது. இதனால் அமைதிப் பேச்சு முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது. இந்தச் சூழலில் ஹார்மூஸ் ஜலசந்தி பகுதி அமெரிக்கா மற்றும் ஈரான் இரு தரப்பு முற்றுகையிலும் உள்ளது. இதன் விளைவாக அந்த முக்கிய கப்பல் போக்குவரத்துப் பாதையில் 97 சதவீதம் போக்குவரத்து குறைந்துள்ளது.

இதனால் உலக சந்தையில் கச்சா எண்ணெய் மற்றும் உரங்களின் விலை விண்ணைத் தொட்டுள்ளது. ஈரான் போரில் இருந்து பின்வாங்க மறுப்பதற்கு மூன்று முக்கிய காரணங்கள் உள்ளதாக சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். 

அமெரிக்காவில் விரைவில் நடைபெறும் பிரதிநிதிகள் சபைத் தேர்தலில் பெட்ரோல் விலை உயர்வு டிரம்புக்கு அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தும் என ஈரான் நம்புகிறது. 

இரண்டாவதாக, போர் காரணமாக ஏற்பட்ட பொருளாதாரச் சேதத்தால் நேட்டோ நாடுகளான பிரிட்டன், ஸ்பெயின் உள்ளிட்டவை டிரம்ப் மீது அதிருப்தியில் உள்ளதாக ஈரான் கருதுகிறது. மூன்றாவதாக, அமெரிக்க நிர்வாகத்துக்குள் உள்ள கருத்து வேறுபாடுகள் மற்றும் உயர்மட்ட அதிகாரிகளின் ராஜினாமா அமெரிக்காவின் பலவீனத்தைக் காட்டுவதாக ஈரான் கணிக்கிறது.

உலக எரிசக்தி நெருக்கடியைப் பயன்படுத்தி அமெரிக்காவை அடி பணிய வைக்க ஈரான் திட்டமிட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் போர் தொடங்கும் அபாயம் நிலவும் நிலையில், சர்வதேச சமூகம் கவலையுடன் இந்த விவகாரத்தை கவனித்து வருகிறது. 

இதையும் படிங்க: எங்கள் விவகாரங்களில் தலையிட வேண்டாம்!! அமெரிக்காவுக்கு சீனா நேரடி வார்னிங்!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share