×
 

அப்போ போப்! இப்போ ஈரான் உச்ச தலைவர்!! தனக்கு மட்டுமே தகுதி இருப்பதாக அடித்துவிடும் ட்ரம்ப்!

கடந்தாண்டு, கத்தோலிக்க கிறிஸ்துவ மதத் தலைவர் போப் ஆகும் தகுதி தனக்கு தான் உண்டு என்று கூறிய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், தற்போது, ஈரான் நாட்டின் ஆட்சியாளர் பதவி தன்னைத் தேடி வந்ததாகக் கூறியுள்ளார்.

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் ஒரு அதிரடி பேச்சால் உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். ஈரான் மீது அமெரிக்கா-இஸ்ரேல் தாக்குதல் நடத்திய பிறகு, ஈரானின் உச்சத் தலைவர் பதவி தன்னைத் தேடி வந்ததாகவும், அதைத் தான் மறுத்துவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

கடந்த பிப்ரவரி 28-ம் தேதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது பெரும் தாக்குதல் நடத்தின. இந்தத் தாக்குதலில் ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனி உட்பட பல முக்கிய தலைவர்கள் உயிரிழந்தனர். அதன் பிறகு கமேனியின் மகன் மொஜ்தபா கமேனி புதிய உச்சத் தலைவராக நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில், வாஷிங்டனில் குடியரசுக் கட்சிக்கு நிதி திரட்டும் ஒரு நிகழ்ச்சியில் பேசிய டிரம்ப், “ஈரான் தலைவர்கள் பலர் என்னிடம் வந்து, ‘உங்களை அடுத்த ஆட்சியாளராக்க விரும்புகிறோம்’ என்று கூறினர். நான் உடனே ‘இல்லை, நன்றி’ என்று மறுத்துவிட்டேன்” என்று சிரித்தபடி தெரிவித்தார்.

இதையும் படிங்க: BREAKING! 48 மணிநேரம் கெடு!! ஹார்முஸ் ஜலசந்தியை திறக்காவிட்டால்?!! ஈரானுக்கு அதிபர் ட்ரம்ப் வார்னிங்!

கடந்த ஆண்டு ஏப்ரலில் போப் பிரான்சிஸ் மறைந்தபோது, “அடுத்த போப் நான் தான்” என்று டிரம்ப் கூறியிருந்தார். அதற்காக அவர் போப் உடை அணிந்த செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) புகைப்படத்தை உருவாக்கி சமூக வலைதளங்களில் பகிர்ந்தும் இருந்தார். அதன் பிறகு, பல போர்களை நிறுத்தியதாகக் கூறி தனக்கு நோபல் அமைதிப் பரிசு வழங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.

இப்போது ஈரான் உச்சத் தலைவர் பதவியும் தன்னைத் தேடி வந்ததாக அவர் கூறியிருப்பது, சமூக வலைதளங்களில் பெரும் கேலியையும் கிண்டலையும் ஏற்படுத்தியுள்ளது. பலரும் “டிரம்ப் அடுத்து என்ன பதவிக்கு விண்ணப்பிப்பார்?” என்று கேலி செய்து வருகின்றனர்.

டிரம்ப்பின் இந்தப் பேச்சு, அவரது தனிப்பட்ட பாணியை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது. அவர் அடிக்கடி சர்வதேச விவகாரங்களை தன்னை மையப்படுத்தி பேசுவது வழக்கம். ஈரான் மீதான தாக்குதலுக்குப் பிறகு, அங்கு ஏற்பட்ட அரசியல் மாற்றத்தை தனது வெற்றியாக சித்தரிக்கும் வகையில் இந்தக் கருத்தை அவர் வெளியிட்டுள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

இந்த சம்பவம் உலக அளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. சிலர் டிரம்ப்பின் பேச்சை நகைச்சுவையாக பார்க்கும் நிலையில், மற்றவர்கள் அது சர்வதேச உறவுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று கவலை தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: இறங்கி வரும் அமெரிக்கா! இறுமாப்பு காட்டும் ஈரான்!! போர் நிறுத்த கோரிக்கை நிராகரிப்பு!! நீடிக்கும் மோதல்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share