×
 

ஈரானிடம் பணமில்லை, படை வலிமையில்லை? அதிபர் டிரம்பின் அதிரடி குற்றச்சாட்டு!

அமெரிக்காவுடனான போர் ஒருநாள் முடிவுக்கு வந்தே தீர வேண்டும் என ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன் தெரிவித்துள்ளார். வலிமையுடனும் கவுரவத்துடனும் இருக்கும் இந்த நேரத்திலேயே போரை முடிவுக்கு கொண்டு வருவது சிறந்தது என்றும் அவர் கூறியுள்ளார்.

அமெரிக்கா–ஈரான் இடையேயான மோதல் நீடித்து வரும் நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே ஒப்பந்தம் ஏற்படுவதற்கான வாய்ப்பு குறித்து மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஈரான் ஒப்பந்தம் செய்து கொள்ள விரும்பினாலும், தாம் எதிர்பார்க்கும் வகையிலான ஒப்பந்தத்திற்கு அந்த நாடு இன்னும் தயாராகவில்லை என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய டிரம்ப், ஈரான் ஒரு ஒப்பந்தத்தை செய்து கொள்ள மிகவும் விரும்புவதாக குறிப்பிட்டார். ஆனால், “சரியான ஒப்பந்தத்தைச் செய்ய அவர்கள் தயாராக இல்லை” என்று அவர் கூறினார். ஈரானிடம் போதிய பணம் இல்லை என்றும், கடற்படை மற்றும் விமானப்படை வலிமையும் குறைந்துள்ளதாகவும் டிரம்ப் தெரிவித்தார்.

மேலும், ஈரானில் ராணுவ வீரர்களுக்கும் போலீசாருக்கும் ஊதியம் வழங்குவதில் சிக்கல் இருப்பதாகவும், நாட்டில் பணவீக்கம் அதிகமாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். எனவே, அடுத்து என்ன நடக்கிறது என்பதை அமெரிக்கா உன்னிப்பாக கவனிக்கப் போவதாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: டிரம்ப் போட்ட மேப்புக்கு ஈரானின் பதிலடி! “கலிபோர்னியா எங்கள் பகுதி” என வெளியான பரபரப்பு வரைபடம்

இதற்கிடையே, முக்கியத்துவம் வாய்ந்த ஹார்முஸ் ஜலசந்தி தொடர்பாகவும் டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார். அந்தப் பகுதியில் அமெரிக்காவுக்கு முழுமையான கட்டுப்பாடு இருப்பதாகவும், இந்தக் கட்டுப்பாடு அதன் உள்பகுதிகளான நிலப்பரப்புகள் வரையிலும் நீண்டுள்ளதாகவும் அவர் கூறியிருப்பது சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.

மறுபுறம், அமெரிக்காவுடனான போர் ஒருநாள் முடிவுக்கு வந்தே தீர வேண்டும் என ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன் தெரிவித்துள்ளார். வலிமையுடனும் கவுரவத்துடனும் இருக்கும் இந்த நேரத்திலேயே போரை முடிவுக்கு கொண்டு வருவது சிறந்தது என்றும் அவர் கூறியுள்ளார்.

அதே நேரத்தில், அமெரிக்கா ஈரானின் பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் உள்கட்டமைப்புகளை தாக்கியதாக பெஷெஷ்கியன் குற்றம்சாட்டியுள்ளார். உலக நாடுகள் இதனை அங்கீகரித்து, ஈரானின் வெற்றியை ஏற்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மோதல் நீடித்து கிட்டத்தட்ட ஆறு மாதங்களை நெருங்கும் நிலையில், இரு நாடுகளும் தங்களது நிலைப்பாட்டில் தொடர்ந்து உறுதியாக உள்ளன. அமெரிக்க ராணுவம், கடற்படை வீரர்கள் உள்ளிட்ட படையினருக்கும் இந்த நீண்டகால மோதல் அழுத்தத்தை ஏற்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.

போர் நீடிக்குமா அல்லது இரு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை மூலம் உடன்பாடு ஏற்படுமா என்பது தற்போது சர்வதேச அளவில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: ஈரானுக்கு எதிராக டிரம்ப் அடுத்த அதிரடி! “இதுவரை இல்லாத பொருளாதார போர்” - அமெரிக்கா கடும் எச்சரிக்கை

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share