×
 

மாசத்துக்கு ஒரு போரை நிப்பாட்டி இருக்கேன்.. லட்சக்கணக்கான பேரை காப்பத்தினேன்.. பெருமை பீற்றும் ட்ரம்ப்..!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், இந்தியா-பாகிஸ்தான் உட்பட உலகம் முழுக்க ஐந்து போர்களை தான் மத்தியஸ்தம் செஞ்சு நிறுத்தியதா, தன்னோட ட்ரூத் சோஷியல் மீடியா தளத்தில் பதிவு போட்டு பீற்றிக்கிட்டிருக்கார்.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தன்னோட பதிவுல, "நான் உலகத்துல ஐந்து போர்களை நிறுத்தியிருக்கேன். அதுல 31 வருஷமா நடந்த காங்கோ-ருவாண்டா போர், 70 லட்சம் பேர் இறந்த ஒரு பயங்கர மோதல், இதுவும் இருக்கு. இந்தியா-பாகிஸ்தான், தாய்லாந்து-கம்போடியா, இஸ்ரேல்-ஈரான், செர்பியா-கொசோவோ, எகிப்து-எத்தியோப்பியானு ஆறு மோதல்களை நிறுத்தியிருக்கேன்.

ஒரு மாசத்துக்கு ஒரு போரை நிறுத்தி, லட்சக்கணக்கான உயிர்களை காப்பாத்தியிருக்கேன்"னு பெருமையா சொல்லியிருக்கார். இதுக்கு வெள்ளை மாளிகை பத்திரிகை செயலாளர் கரோலின் லீவிட், "ட்ரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு கொடுக்கணும்"னு கூவியிருக்காங்க.

ஆனா, இந்தியா-பாகிஸ்தான் விவகாரத்துல ட்ரம்போட கிளைம் மேல இந்தியா சும்மா இருக்கல. மே 7, 2025-ல பாகிஸ்தானோட பயங்கரவாத உள்கட்டமைப்பை தாக்கி, இந்தியா ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடத்துச்சு. இது ஏப்ரல் 22-ல பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியா இருந்தது, அதுல 26 பேர் கொல்லப்பட்டாங்க. மே 10-ல இரு நாடுகளும் போர் நிறுத்த ஒப்பந்தம் பண்ணாங்க.

இதையும் படிங்க: அணுசக்தி விவகாரம்.. இஸ்ரேலுக்கு கண்டனம்.. ஈரானுக்கு சப்போர்ட் செய்யும் பாக்.,

ஆனா, இதுக்கு அமெரிக்கா மத்தியஸ்தம் பண்ணுச்சுனு ட்ரம்ப் சொல்றார். இந்திய பிரதமர் நரேந்திர மோடியோ, "எந்த உலக தலைவரும் இந்தியாவை நிறுத்த சொல்லலை. பாகிஸ்தான் ராணுவ இயக்குனர் (DGMO) தான் இந்தியாவோட பேசி, போர் நிறுத்தம் கேட்டார்"னு லோக்சபாவில் தெளிவா சொல்லியிருக்கார்.

ட்ரம்ப், "நான் இந்தியா, பாகிஸ்தானுக்கு வர்த்தக ஒப்பந்தத்தை மிரட்டியா பயன்படுத்தி போரை நிறுத்தினேன். ‘சண்டை பண்ணினா வர்த்தகம் இல்லை’னு சொன்னேன், உடனே ரெண்டு நாடுகளும் நிறுத்திட்டாங்க"னு பேசியிருக்கார். ஆனா, இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், "எந்த மூணாவது நாட்டு தலையீடும் இல்லை. இது இரு நாட்டு ராணுவ பேச்சுவார்த்தை மூலமா நடந்தது"னு மறுத்திருக்கார். இந்தியா எப்பவுமே காஷ்மீர் விவகாரத்துல மூணாவது நாடு தலையிடுறதை எதிர்க்குது.

ட்ரம்போட இந்த பெருமை பேச்சு, அவரோட நோபல் பரிசு ஆசையை காட்டுது. 2009-ல ஒபாமாவுக்கு நோபல் கிடைச்சது, ட்ரம்புக்கு ஒரு எரிச்சலை கொடுத்திருக்கு. இதனால, "நான் இவ்வளவு சாதிச்சிருக்கேன், எனக்கு ஏன் நோபல் கொடுக்கலை?"னு அவர் அடிக்கடி சொல்றார். ஆனா, இந்தியா-பாகிஸ்தான் விவகாரத்துல இந்தியா ட்ரம்போட கிளைமை தெளிவா மறுத்திருக்கு. காங்கிரஸ் கட்சியும், "ட்ரம்ப் இப்படி 25 தடவை சொல்லியும், மோடி ஏன் மவுனமா இருக்கார்?"னு கேள்வி எழுப்புது.

இதையும் படிங்க: அந்த முகமும், அவ உதடும், அது அசையுற விதமும்!! எல்லை மீறும் வர்ணிப்பு!! சர்ச்சையில் ட்ரம்ப்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share