×
 

“ஜோலி முடிஞ்சது” - சீனாவை காலி செய்யப்போகும் அமெரிக்கா... பிரம்மாஸ்த்திரத்தை கையில் எடுத்த டிரம்ப்...!

அமெரிக்காவில் இருந்து சோயா பீன்ஸ் கொள்முதல் செய்வதை சீனா நிறுத்தியுள்ளது.

சீனா - அமெரிக்கா இடையில் அதிகரித்து வரும் வர்த்தக மோதல்கள் உலக நாடுகளை பதற்றத்தில் ஆழ்த்தியுள்ளது. நவம்பர் 1 முதல் சீனாவுக்கு 100% கூடுதல் வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்திருந்தார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த சீனா, வரி விதிப்பு நடவடிக்கைகளில் அமெரிக்கா இரட்டை நிலைப்பாட்டை பின்பற்றுவதாக குற்றச்சாட்டியது. மேலும் இதுபோன்ற அச்சுறுத்தல்களுக்கு எல்லாம் அஞ்ச மாட்டோம் என்றும், எதிர்த்து போராடுவோம் எனவும் சீனா அமெரிக்காவை கடுமையாக எச்சரித்திருந்தது. 

இந்த வர்த்தக மோதலின் ஒரு பகுதியாக, அமெரிக்க அதிபர் டிரம்பின் புதுப்பிக்கப்பட்ட வரிகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையிலான பொருளாதார நடவடிக்கைகளில் சீனா களமிறங்கியுள்ளது. இதனால் அமெரிக்காவில் இருந்து சோயா பீன்ஸ் கொள்முதல் செய்வதை சீனா நிறுத்தியுள்ளது. ஏற்கனவே டிரம்பின் வரி விதிப்பால் உரம் மற்றும் உபகரணங்களுக்கான செலவினங்கள் அதிகரித்துள்ளதாக அமெரிக்க விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். இந்நிலையில் சீனாவின் இந்த திடீர் அறிவிப்பு அமெரிக்க மக்களின் டிரம்ப் மீதான அதிருப்தியை அதிகரித்துள்ளது. 

உலகின் சோயாபீன்களில் தோராயமாக 61% ஏற்றுமதி செய்யும் அமெரிக்கா, அறுவடை தொடங்கியுள்ள சமயத்தில் சீனாவில் இருந்து பூஜ்ஜியம் கொள்முதலை பதிவு செய்துள்ளது. சீனா அமெரிக்க விவசாயிகளிடமிருந்து சோயாபீன்களை வேண்டுமென்றே வாங்கவில்லை என்றும், அதனால்தான் பெய்ஜிங்குடனான வணிகத்தை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து ஆலோசித்து வருவதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். 

இதையும் படிங்க: கோவா அமைச்சர் ரவி நாயக் காலமானார்..!! பிரதமர் மோடி உள்ளிட்ட பலர் இரங்கல்..!!

இதுகுறித்து தனது சோசியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், "சீனா நமது சோயாபீன்ஸை வேண்டுமென்றே வாங்காமல், நமது சோயாபீன் விவசாயிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்துவது பொருளாதார ரீதியாக விரோதமான செயல் என்று நான் நம்புகிறேன். அதற்கு பழிவாங்கும் விதமாக, சமையல் எண்ணெய் மற்றும் வர்த்தகத்தின் பிற கூறுகளுடன் சீனா தொடர்புடைய வணிகத்தை நிறுத்துவது குறித்து நாங்கள் பரிசீலித்து வருகிறோம். உதாரணமாக , சமையல் எண்ணெயை நாமே எளிதாக உற்பத்தி செய்யலாம், அதை சீனாவிடமிருந்து வாங்க வேண்டிய அவசியமில்லை" என பதிவிட்டுள்ளார். 

அதாவது சீனா தங்களிடமிருந்து சோயா பீன்ஸ் வாங்குவதை நிறுத்தியதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக சீனாவில் இருந்து சமையல் எண்ணெய்களை இறக்குமதி செய்வதை டொனால்ட் டிரம்ப் தடை விதிக்கக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்னதாக அமெரிக்காவுடன் வர்த்தக பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து வரும் நிலையில், மேம்பட்ட தொழில்நுட்ப உற்பத்திக்கு தேவையான அரிய தாதுக்கள் மற்றும் பிற பொருட்களின் ஏற்றுமதிக்கு சீனா கட்டுப்பாடுகளை கடுமையாக்கியது. தற்போது அதேபாணியில் அமெரிக்காவில் சோயா பீன்ஸ் அறுவடை தொடங்கியுள்ள சமயத்தில், அந்நாட்டில் அதிகமாக கொள்முதல் செய்யும் சீனா திடீரென கொள்முதலை நிறுத்தி டிரம்ப் மீதான அழுத்தத்தை அதிகரித்துள்ளது. 

இதையும் படிங்க: தீபாவளிக்கு சொந்த ஊர் செல்வோருக்கு குட்நியூஸ் - ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் எடுத்த அதிரடி முடிவு...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share