டிரம்புக்கே இந்த நிலைமையா?! ஈரான் தாக்குதல் நடத்துமோ என அச்சம்! லாரியில் மறைந்து ரகசிய விமானத்தில் பயணம்!
ஈரானிடம் இருந்து அச்சுறுத்தல் வந்ததை தொடர்ந்து, அமெரிக்க அதிபர் டிரம்ப் துருக்கியில் கேட்டரிங் லாரியில் ஒளிந்துகொண்டு, பிறகு பிரிட்டனுக்கு ரகசிய ராணுவ விமானத்தில் பயணம் செய்தது தெரியவந்துள்ளது.
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு ஈரான் தரப்பில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், துருக்கியில் இருந்து பிரிட்டனுக்கு அவர் மேற்கொண்ட பயணம் தொடர்பாக பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. வழக்கமான ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தை பயன்படுத்தாமல், பாதுகாப்பு காரணங்களுக்காக மாற்று விமானத்தில் டிரம்ப் ரகசியமாக அழைத்துச் செல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்கா–ஈரான் இடையேயான பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், டிரம்பின் வெளிநாட்டு பயணங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் நேட்டோ உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக டிரம்ப் துருக்கியின் அங்காராவுக்கு சென்றிருந்தார்.
அங்காராவில் இருந்து அவர் புறப்படும்போது, முதலில் வழக்கமான ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் ஊடகங்கள் முன்னிலையில் ஏறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், அந்த விமானம் உடனடியாக புறப்படவில்லை. பின்னர் ஊடக பிரதிநிதிகள் அங்கிருந்து சென்ற பிறகு, டிரம்ப் வேறு விமானத்திற்கு மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: ஈரானிடம் இழப்பீடு கேட்கும் டிரம்ப்! 52,000 பேர் உயிரிழப்பு முதல் 50 ஆண்டு போராட்டங்கள் வரை! பரபரப்பு கோரிக்கை
இதற்காக கேட்டரிங் வாகனம் ஒன்று பயன்படுத்தப்பட்டதாகவும், அதன் மூலம் டிரம்ப் மற்றும் அவரது பாதுகாப்பு குழுவினர் வேறு விமானத்திற்கு ரகசியமாக அழைத்துச் செல்லப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பின்னர் துருக்கியில் இருந்து பிரிட்டனுக்கு சி-32ஏ ரக ராணுவ விமானத்தில் டிரம்ப் பயணம் செய்ததாக கூறப்படுகிறது.
இந்தப் பயணத்தில் அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலாளர் பீட் ஹெக்செத் மற்றும் ரகசிய பாதுகாப்பு அதிகாரிகள் உடன் இருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. வழக்கமாக பயன்படுத்தப்படும் பெரிய விமானத்திற்கு பதிலாக சிறிய ரக ராணுவ விமானம் தேர்வு செய்யப்பட்டதற்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.
இதனிடையே, டிரம்ப் இல்லாமல் ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் பயணித்த பத்திரிகையாளர்கள் மற்றும் சில வெள்ளை மாளிகை ஊழியர்களிடம் விமானத்தின் ஜன்னல் திரைகளை மூடி வைக்குமாறு அறிவுறுத்தப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரிட்டனை சென்றடைந்த டிரம்ப் பின்னர் அங்கிருந்து பாதுகாப்பாக அமெரிக்கா திரும்பியதாக கூறப்படுகிறது. ஈரானுடனான பதற்றம் நீடிக்கும் நிலையில், அமெரிக்க அதிபரின் பாதுகாப்பு நடைமுறைகளில் ஏற்பட்டுள்ள மாற்றம் தற்போது சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது.
எனினும், கேட்டரிங் வாகனம் மூலம் ரகசியமாக மாற்றப்பட்டதாக கூறப்படும் நடவடிக்கை மற்றும் விமானம் மாற்றப்பட்டதற்கான காரணம் குறித்து வெள்ளை மாளிகை தரப்பில் முழுமையான அதிகாரப்பூர்வ விளக்கம் வெளியாகும் வரை, இந்த தகவல்களின் அனைத்து விவரங்களையும் உறுதி செய்யப்பட்டதாக கருத முடியாது.
இதையும் படிங்க: ஈரான் போருக்கு எண்ட் கார்டு? டிரம்ப் தயாரிக்கும் ரகசிய திட்டம்! அமெரிக்க ஊடகம் வெளியிட்ட பரபரப்பு தகவல்!