ரஷ்யா நோக்கி செல்லும் அணு ஆயுத நீர்மூழ்கி கப்பல்கள்.. ட்ரம்ப் நடவடிக்கையால் தொற்றிய போர் பதற்றம்..!
அமெரிக்க அதிபர் டெனால்டு டிரம்ப் நேற்று அணு ஆயுத தாக்குதல் நடத்தும் இரு நீர்மூழ்கி கப்பல்களை ரஷ்யா நோக்கி அனுப்பி வைக்க உத்தரவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்யாவும் உக்ரைனும் போரில் மோதிக்கிட்டு இருக்கிற நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் இந்தப் போரை முடிவுக்கு கொண்டுவர முயற்சி பண்ணிட்டு இருக்கார். உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததால, அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை விதிச்சாங்க. இதனால ரஷ்யாவுக்கு பணப்புழக்கம் கஷ்டமாச்சு. இதை சமாளிக்க, ரஷ்யா தன்னோட கச்சா எண்ணெயை தள்ளுபடி விலையில் விக்க ஆரம்பிச்சு, இந்தியா உள்ளிட்ட நாடுகள் அதை மலிவா வாங்கினாங்க. ஆனா, இந்தியா ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கறது அமெரிக்காவுக்கு ஒட்டவே இல்ல.
இதனால கோபமான ட்ரம்ப், இந்திய பொருட்களுக்கு 25% வரி போடுவேன்னு அறிவிச்சார். இதைப் பத்தி ரஷ்யாவின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் துணைத் தலைவர் டிமிட்ரி மெட்வெடேவ், “ட்ரம்ப் இந்தியா-ரஷ்யாவோட ‘இறந்து போன’ பொருளாதாரத்தைப் பத்தி பேசறதுக்கு முன்னாடி, ரஷ்யாவோட ‘டெட் ஹேண்ட்’னு சொல்லப்படுற அணு ஆயுத அமைப்பு எவ்வளவு ஆபத்துனு யோசிக்கணும்”னு கடுமையா எச்சரிச்சார். இந்த ‘டெட் ஹேண்ட்’னு சோவியத் காலத்து அணு ஆயுத தாக்குதல் அமைப்பு, ரஷ்ய தலைமை அழிஞ்சாலும் தானாகவே அணு தாக்குதலை தொடங்குற மாதிரியான சிஸ்டம். இந்த எச்சரிக்கை ட்ரம்பை பயங்கர கோபப்படுத்திடுச்சு.
கோபத்தோட ட்ரம்ப், ரஷ்யாவை நோக்கி இரண்டு அணு ஆயுத நீர்மூழ்கி கப்பல்களை அனுப்ப உத்தரவு போட்டார். இது உலக அரங்கில் பெரிய பதற்றத்தை கிளப்பியிருக்கு. ட்ரம்ப் தன்னோட சமூக வலைதளமான ட்ரூத் சோஷியல்ல, “மெட்வெடேவோட ஆபத்தான பேச்சு காரணமா இந்த முடிவு எடுத்தேன். இது வெறும் வார்த்தையோட நிக்கும்னு நம்பறேன், ஆனா எச்சரிக்கையா இந்த கப்பல்களை அனுப்பியிருக்கேன்”னு எழுதினார். இந்த கப்பல்கள் அணு ஆயுதம் ஏந்தியவையா, இல்ல அணு சக்தியில் இயங்குறவையானு தெளிவா சொல்லல, ஆனா இந்த நடவடிக்கை ரஷ்யாவையும் அமெரிக்காவையும் மோதல் பாதைக்கு இழுத்துட்டு இருக்கு.
இதையும் படிங்க: ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதை நிறுத்திய இந்தியா! ட்ரம்ப் மிரட்டல் காரணமா? புதின் மீது கோவமா?
இந்த மோதல் வெறும் வார்த்தைப் போரா, இல்ல உண்மையிலேயே பெரிய ஆபத்துக்கு வழிவகுக்குமானு தெரியல. அமெரிக்காவுக்கு 14 அணு சக்தி நீர்மூழ்கி கப்பல்கள் இருக்கு, அதுல 8 முதல் 10 எப்பவும் தயார் நிலையில் இருக்கும். இவை அணு ஆயுதங்களை ஏந்தி ரஷ்யாவை தாக்கக்கூடியவை. ஆனா, இப்போ இந்த கப்பல்கள் உண்மையிலேயே நகர்த்தப்பட்டதா, இல்ல ட்ரம்ப் வெறும் அழுத்தம் கொடுக்க மட்டும் இப்படி சொன்னாரானு தெளிவில்லை.
ரஷ்யா-அமெரிக்கா இடையில இந்த பதற்றம் உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர உதவுமா, இல்ல புது பிரச்சினையை உருவாக்குமானு கேள்வி எழுது. இந்தியாவோட எண்ணெய் கொள்முதல் நிறுத்தப்பட்டிருக்கறதும், இந்த அணு ஆயுத கப்பல் நகர்வும் உலக பொருளாதாரத்தையும் அரசியலையும் எப்படி பாதிக்கும்னு பாக்கணும். இப்போதைக்கு, இந்த பதற்றம் உலகத்தை கவனமா இருக்க வைச்சிருக்கு.
இதையும் படிங்க: 6 சர்வதேச இந்திய நிறுவனங்களுக்கு தடை!! சொத்துக்களை முடக்கி எல்லை மீறும் ட்ரம்ப்..