இந்தியாவில் ஐ-போனை அளவா தயார் பண்ணுங்க..! ஆப்பிள் நிறுவனர் டிம் குக்கிற்கு அதிபர் ட்ரம்ப் அறிவுரை..!
இந்தியாவில் ஐ-போனை குறைந்த அளவே தயார் செய்யுங்கள் என்று ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக்கிற்கு அதிபர் ட்ரம்ப் அறிவுறுத்தியுள்ளார்.
இந்தியாவில் ஐ-போனை குறைந்த அளவே தயார் செய்யுங்கள், அமெரிக்காவில் உற்பத்தியை அதிகப்படுத்துங்கள் என்று ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக்கிற்கு அதிபர் ட்ரம்ப் அறிவுறுத்தியுள்ளார்.
கத்தார் தலைநகர் தோஹாவில் வர்த்தக மாநாடு நடந்து வருகிறது. இதில் முதல்முறையாக மத்திய கிழக்கு நாடுகளில் ஆப்பிள் நிறுவனம் தனது உற்பத்தி கிளையை உருவாக்குவது குறித்து பேச்சு நடத்தி வருகிறது. இந்த வர்த்தக மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இதையும் படிங்க: ‘மேக் இன் இந்தியா’வை மேம்படுத்தும் ஆப்பிள்.. அமெரிக்காவில் விற்கப்போகும் இந்தியா மேட் ஐ-போன்கள்..!
அப்போது அதிபர் ட்ரம்ப் பேசுகையில் “டிம் குக்கிடம் நேற்று சின்ன பிரச்சினை இருந்தது. 50000 கோடி டாலருடன் நீங்கள் இருந்து வந்துல்ளீர்கள். ஆனால், இந்தியாவில் பல இடங்களில் நீங்கள் உற்பத்தி நிறுவனத்தை தொடங்கிவிட்டதாக கேள்விப்பட்டேன். நீங்கள் இந்தியாவில் தயாரிப்பு நிறுவனத்தை புதிதாகத் தொடங்குவதில் எனக்கு விருப்பமில்லை. இந்தியாவில் உற்பத்தி நிறுவனத்தை தொடங்கலாம், இந்தியாவில் நீங்கள் தொழில்நடத்த விரும்பினால், உலகிலேயே அதிகமான வரிவிதிக்கும் நாடாக இந்தியாதான் இருக்கிறது என்பது மறக்காதீர்கள்.
அமெரிக்காவுக்கு வரிச்சலுகை குறித்து இந்தியா பேசி வருகிறது. அமெரிக்க பொருட்களுக்கு ஜூரோ வரிவிதிப்பு குறித்தும் பேசியுள்ளது. இந்தியாவில் பொருட்களை விற்பனை செய்வது கடினம். இந்தியாவில் ஐ-போனை குறைந்த அளவே தயார் செய்யுங்கள், ஆனால் அமெரிக்காவில் உங்கள் ஆப்பிள் நிறுவனத்தில் ஐபோன் உற்பத்தியை அதிகப்படுத்துங்கள்” எனத் தெரிவித்தார்.
குவாட் கூட்டமைப்பில் அமெரிக்காவோடு இந்தியாவும் ஒரு உறுப்பினர்நாடு. இந்த குவாட் கூட்டமைப்பில் அமெரிக்கா, இந்தியா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா நாடுகள் உள்ளன. ஆனால் கூட்டணிக்குள் இருந்து கொண்டே இந்தியாவில் தொழில்தொடங்குவதை விரும்பவில்லை என்று ஆப்பிள் சிஇஓ டிம் குக்கிடம் அதிபர் ட்ரம்ப் பேசியுள்ளார்.
இதையும் படிங்க: காஷ்மீர் விவகாரத்தை நாங்கள் பார்த்துக்கிறோம்.. அதிபர் ட்ரம்ப் வாய்க்கு பூட்டுபோட்ட இந்தியா..!