×
 

ரஷ்யா - உக்ரைன் மோதல் உலகப்போராக மாறும்!! அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வார்னிங்!

''ரஷ்யா - உக்ரைன் இடையில் நடக்கும் மோதல் காரணமாக கடந்த மாதம் மட்டும் 25 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளதாகவும், இது மூன்றாம் உலகப்போருக்கு வழிவகுக்கும்,'' என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

வாஷிங்டன், டிசம்பர் 13: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ரஷ்யா-உக்ரைன் இடையிலான போர் தொடர்ந்தால் மூன்றாம் உலகப்போருக்கு வழிவகுக்கும் என்று கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். 
வெள்ளை மாளிகையில் நிருபர்களிடம் பேசிய அவர், கடந்த மாதம் மட்டும் இந்த மோதலில் சுமார் 25 ஆயிரம் பேர், பெரும்பாலும் வீரர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவித்தார். இந்த உயிரிழப்புகளை நிறுத்த வேண்டும் என்று விரும்புவதாகவும், அதற்காக கடுமையாக உழைத்து வருவதாகவும் அவர் கூறினார்.

ரஷ்யா-உக்ரைன் போர் கடந்த சில ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இதை நிறுத்துவதற்கு அதிபர் டிரம்ப் பல முயற்சிகள் எடுத்துள்ளார். அமைதி பேச்சுவார்த்தைகளை விரைவுபடுத்தி வரும் நிலையில், போரின் தீவிரம் குறையவில்லை. 

அதிபர் டிரம்ப் கூறுகையில், "இந்த மோதலில் உயிரிழப்புகளைத் தடுக்க விரும்புகிறோம். கடந்த மாதம் மட்டும் 25 ஆயிரம் வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இதை நிறுத்த வேண்டும். மோதல் தொடர்ந்தால் மூன்றாம் உலகப்போருக்கு வழிவகுக்கும். இதை முன்னரே கூறியிருந்தேன். அனைவரும் இப்படி செய்தால் மூன்றாம் உலகப்போரைத் தவிர வேறு வழியில்லை. இதை யாரும் விரும்பவில்லை" என்றார்.

இதையும் படிங்க: டைம் வேஸ்ட் பண்ண விரும்பல!! ரஷ்யா - உக்ரைன் போர் நிறுத்தம்?! அதிபர் ட்ரம்ப் அப்செட்!

போர் தொடர்ந்து நீடிப்பதால் டிரம்ப் விரக்தியடைந்துள்ளதாக வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் லெவிட் தெரிவித்தார். அவர் கூறுகையில், "அமைதி ஒப்பந்தத்தை எட்ட ரஷ்யாவும் உக்ரைனும் மெதுவாக செயல்படுவதால் அதிபர் டிரம்ப் விரக்தியடைந்துள்ளார். 

வெறும் சந்திப்புக்காக மட்டும் கூட்டங்கள் நடப்பதை அவர் விரும்பவில்லை. முடிவு எடுக்க முடியாத சந்திப்புகளால் டிரம்ப் சோர்வடைந்துவிட்டார். அவர் முடிவையே எதிர்பார்க்கிறார். வெற்று வார்த்தைகளை அல்ல. இந்தப் போர் முடிவுக்கு வர வேண்டும் என்று அவர் விரும்புகிறார்" என்றார்.

அமெரிக்காவின் சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காஃப் உள்ளிட்டோர் ரஷ்யா மற்றும் உக்ரைன் அதிகாரிகளுடன் தொடர்ந்து பேச்சு நடத்தி வருகின்றனர். ஐரோப்பிய தலைவர்களுடனும் டிரம்ப் ஆலோசனை நடத்தியுள்ளார். இருப்பினும், அமைதி ஒப்பந்தத்தில் முன்னேற்றம் இல்லாதது உலக அளவில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் போர் உலக அமைதிக்க்ரை அச்சுறுத்துவதாக பலர் கருதுகின்றனர்.

இதையும் படிங்க: அமைதி ஒப்பந்தத்தை படிக்காவே இல்ல! வேணாம்னு சொன்னா எப்புடி? உக்ரைன் அதிபர் மீது ட்ரம்ப் அதிருப்தி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share