×
 

ட்ரம்ப் - ஜெலன்ஸ்கி நாளை சந்திப்பு!! இன்று தாக்குதலை தீவிரப்படுத்திய புதின்! உக்ரைன் - ரஷ்யா போர்!

ரஷியா- உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா முயற்சி. நாளை டிரம்ப்- ஜெலன்ஸ்கி பேச்சுவார்த்தை நடத்த இருக்கின்றனர்.

ரஷியா-உக்ரைன் இடையே நான்கு ஆண்டுகளாக நீடிக்கும் போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இதற்காக உக்ரைன் மற்றும் அமெரிக்க அதிகாரிகள் இணைந்து தயாரித்த 20 அம்ச அமைதித் திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. இந்தத் திட்டம் 90 சதவீதம் தயாராக உள்ளதாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

இந்தச் சூழலில், நாளை (டிசம்பர் 28, ஞாயிறு) உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அமெரிக்க அதிபர் டிரம்பை புளோரிடாவில் சந்தித்து பேச உள்ளார். இந்தச் சந்திப்பில் உக்ரைனின் பாதுகாப்பு உத்தரவாதம், டான்பாஸ் பகுதியின் எதிர்காலம், ரஷியா கட்டுப்பாட்டில் உள்ள ஜபோரிஜியா அணு உலை நிர்வாகம் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

புது ஆண்டுக்கு முன்பே போரை முடிவுக்கு கொண்டுவர முடியும் என்ற நம்பிக்கையை ஜெலன்ஸ்கி வெளிப்படுத்தியுள்ளார். அதேநேரம், இந்தத் திட்டத்தை ரஷியா ஏற்குமா என்பது குறித்து சந்தேகம் நிலவுகிறது.

இதையும் படிங்க: உக்ரைன் - ரஷ்யா போரின் இறுதிக்கட்டம்! வரவிருக்கும் வாரங்கள் மிக முக்கியம்!! ஜெலன்ஸ்கி சூசகம்!

இந்தப் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ள நிலையில், உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷியா ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் மூலம் பெரிய அளவில் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் குறைந்தது 8 முதல் 11 பேர் வரை காயமடைந்துள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

உயரமான குடியிருப்புக் கட்டிடங்கள், தொழிற்சாலைகள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளை ரஷியா குறிவைத்து தாக்கியுள்ளது. தாக்குதலால் சில கட்டிடங்களில் தீ பிடித்து எரிந்தது. உடனடியாக மீட்புப் படையினர் விரைந்து தீயை அணைத்தனர்.

ரஷியாவின் இந்தத் தாக்குதல் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு முந்தைய நாளில் நடத்தப்பட்டுள்ளதால், போர் முடிவுக்கு வருவது குறித்த சந்தேகத்தை அதிகரித்துள்ளது. ரஷியா தொடர்ந்து உக்ரைன் நகரங்களை தாக்கி வருவதால், அமைதித் திட்டத்தை மாஸ்கோ ஏற்க வாய்ப்பு குறைவு என்று வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவின் தலைமையிலான இந்த அமைதி முயற்சி வெற்றி பெறுமா என்பது உலகக் கவனத்தை ஈர்த்துள்ளது. ஜெலன்ஸ்கி-டிரம்ப் சந்திப்பு போரின் போக்கை மாற்றக்கூடிய முக்கியமான திருப்புமுனையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: அமைதி பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தால்?!! உக்ரைனுக்கு அதிபர் புடின் வார்னிங்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share