இந்தியர்கள் குடும்பங்களுக்கு பணம் அனுப்பினால் 5% வரி: அதிபர் ட்ரம்ப் திட்டம்..!
அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள் தங்களது குடும்பங்களுக்கு பணம் அனுப்பினால் 5% வரி செலுத்தும் புதிய திட்டத்தை அதிபர் ட்ரம்ப் கொண்டு வர உள்ளார்.
அமெரிக்காவில் வசிக்கும் அமெரிக்கர்கள் அல்லாதவர்கள் தங்கள் சொந்த நாட்டுக்கு பணம் அனுப்பினால் 5 சதவீதம் வரி செலுத்தும் புதிய திட்டத்தை அதிபர் ட்ரம்ப் கொண்டுவர உள்ளார். இந்த திட்டம் நடைமுறைக்குவந்தால், அமெரிக்காவில் பணியாற்றும் இந்தியர்கள் தாங்கள் தாயகத்தில் உள்ள குடும்பங்களுக்கும் அனுப்பும் பணத்துக்கு வரி செலுத்த வேண்டியிதிருக்கும், இந்திய குடும்பங்களை கடுமையாக பாதிக்கும்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் இந்தத் திட்டம் உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக இந்தியாவில் உள்ள குடும்பங்களுக்கு இடியாக இறங்கியுள்ளது. ஏனென்றால் அமெரிக்காவில் வசிக்கும் வெளிநாட்டவர்களில் பெரிய அளவில் இருப்பவர்கள் இந்தியர்கள். இவர்கள் மாதாந்தோறும் இந்தியாவில் உள்ள தங்கள் குடும்பத்துக்கு பணம் அனுப்பி வரும் நிலையில் அதற்கு வரி செலுத்தும் பட்சத்தில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.
இதையும் படிங்க: இந்தியா - பாக்., போரை நிறுத்தியதே நான் தான்.. மார் தட்டிக்கொள்ளும் ட்ரம்ப்.. புகையும் சர்வதேச அரசியல்..!
இந்த மசோதாவுக்கு “தி ஒன் பிக் பியூட்டிபுல் பில்” என்று பெயரிட்டு கடந்த 12ம் தேதி பிரதிநிதிகள் சபையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மசோதா இரு அவைகளிலும் விவாதிக்கப்பட்டு, நிறைவேற்றப்பட்டபின்புதான் நடைமுறைக்கு வரும்.
இந்த மசோதா ஒருவேளை சட்டமாகினால் அமெரிக்காவில் வசிக்கும் வெளிநாட்டவர்கள், கிரீன் கார்டு பெற்றவர்கள், பணியாட்கள், ஹெச்1பி மற்றும் ஹெச்2ஏ விசா வைத்து பணியாற்றுவோர் அனைவரும் தங்களின் குடும்பத்துக்கு அனுப்பும் பணத்துக்கு வரி செலுத்த வேண்டியதிருக்கும். இந்த மசோதாவில் இருந்து அமெரிக்க குடிமக்களுக்கு மட்டும் விதிவிலக்கு உண்டு.
இந்த மசோதாவின்படி வெளிநாட்டைச் சேர்ந்தவர் தாயகத்துக்கு பணம் அனுப்பும்போது, வங்கியே அதற்குரிய 5 சதவீதம்வரியை பிடித்தம் செய்து, காலாண்டுக்கு ஒருமுறை அமெரிக்க கரூவூலத்துக்கு அனுப்பிவைக்கும்.
இந்தியாவைப் பொறுத்தவரை 2023-24ம்ஆண்டில் மட்டும் 12000 கோடி டாலர் இந்தியர்களால் வந்துள்ளது. இதில் அமெரிக்காவில் இருந்து மட்டும் 28 சதவீதம் தொகை இ்ந்தியாவுக்கு வந்துள்ளது.
இதில் 5 சதவீதம் வரிவிதிக்கும்போது, இந்தியர்கள் அனுப்பும் பணம் அனுப்பும் செலவு அதிகரிக்கும். இந்தியர்கள் வீட்டுக்கு பணம் அனுப்பும் அளவும் 10 முதல் 15 சதவீதம் குறைய வாய்ப்புள்ளது, இதனால் இந்தியாவுக்கு ஆண்டுக்கு அந்நியச் செலாவணி வருகை 1200 முதல் 1800 கோடி டாலர்கள் வரை குறையக்கூடும். இந்தியாவின் அந்நியச்செலாவணிச் சந்தையில் டாலருக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டு, டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு வரும் காலங்களில் மேலும் சரியலாம்.
அவ்வாறு சூழல் ஏற்பட்டால் ரிசர்வ் வங்கி தலையிட்டு தன்னிடம் கையிருப்பு இருக்கும் டாலரை அந்நியச் செலாவணிச் சந்தையில் புழக்கத்தில் விடும். அமெரிக்காவில் இது சட்டமாகினால் டாலருக்கு எதிராக ரூபாயின் மதிப்பு ஒரு ரூபாய் முதல் ரூ.1.50 காசுகள்வரை மதிப்பு குறையக்கூடும் என பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
இதையும் படிங்க: ‘மேக் இன் இந்தியா’வை மேம்படுத்தும் ஆப்பிள்.. அமெரிக்காவில் விற்கப்போகும் இந்தியா மேட் ஐ-போன்கள்..!