×
 

72 மணி நேரம் தான் டைம்! ஹமாஸுக்கு ட்ரம்ப் கெடு! போரை நிறுத்த 20 அம்ச திட்டம்!

இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போரை முடிவுக்குக் கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்ட 20 அம்ச அமைதி திட்டத்தை அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.

இஸ்ரேல்-ஹமாஸ் போரை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், 20 அம்ச அமைதித் திட்டத்தை அறிவித்துள்ளார். இதை இஸ்ரேல் ஏற்க, ஹமாஸ் மவுனம் காக்கிறது. இதையடுத்து, 3 நாட்கள் கெடு விதித்த டிரம்ப், "ஏற்காவிட்டால் கடுமையான விளைவுகள்" என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். 

காசாவில் 2 ஆண்டுகளாக நடந்து வரும் இந்தப் போர், 66,000 பாலஸ்தீனியர்களின் உயிரைப் பறித்துள்ளது. சர்வதேச அழுத்தத்திற்கு மத்தியில், இத்திட்டம் போரை முடிக்கும் முதல் பெரிய முயற்சியாகக் கருதப்படுகிறது.

2023 அக்டோபர் 7-ம் தேதி, காசாவை கட்டுப்படுத்தும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு, இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. 1,200 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். 250-க்கும் மேற்பட்டோர் பிணையாளர்களாகப் பிடுங்கப்பட்டனர். இதற்குப் பதிலடியாக இஸ்ரேல் தொடங்கிய ராணுவ நடவடிக்கை, 2 ஆண்டுகளாக நீடிக்கிறது. 

இதையும் படிங்க: காசா போரை எப்படி நிப்பாட்டுறது! பாக்., அரபு தலைவர்களுடன் ட்ரம்ப் ஆலோசனை!

இதில் காசா தரப்பில் 66,000 பேர் உயிரிழந்துள்ளனர். மனிதாபிமான உதவிகள் கிடைக்காமல், காசாவின் 23 லட்சம் மக்கள் தவிக்கின்றனர். ஐ.நா., ஐரோப்பிய நாடுகள், அரபு நாடுகள் போரை நிறுத்த கோரி வருகின்றன. பல நாடுகள் பாலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரித்துள்ளன.

வாஷிங்டனில் செப்டம்பர் 29 அன்று, டிரம்ப் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை சந்தித்தார். அப்போது, போரை முடிவுக்கு கொண்டு வரும் 20 அம்ச அமைதித் திட்டத்தை டிரம்ப் முன்மொழிந்தார். இஸ்ரேல் இதை ஏற்கிறது என்று அவர் அறிவித்தார். ஹமாஸ் ஒப்புக்கொண்டால் போர் உடனடியாக நிறுத்தம். இல்லையெனில், இஸ்ரேல் ராணுவம் ஹமாஸை முற்றிலும் ஒழிக்கும் என அமெரிக்கா ஆதரவு தெரிவிக்கும் என்று டிரம்ப் எச்சரித்தார்.

ஹமாஸ், "தீவிரமாக ஆராய்ந்து பதிலளிப்போம்" என்று கூறியுள்ளது. ஆனால், 3 நாட்கள் கெடு விதித்த டிரம்ப், "ஏற்காவிட்டால் கடினமான விளைவுகள்" என்று கூறினார். இஸ்ரேல், "இது போரை முடிக்கும் சிறந்த வழி" என்று ஆதரவு தெரிவித்துள்ளது.

20 அம்ச திட்டத்தின் முக்கியங்கள்: இத்திட்டத்தின் முக்கிய நோக்கம், ஹமாஸின் அரசியல், ராணுவ கட்டமைப்பை கலைப்பது. சுருக்கமாக:

  • ஆயுத கைவிடல்: ஹமாஸ், பிற ஆயுதக் குழுக்கள் ஆயுதங்கள், வெடிபொருள் சுரங்கங்கள், உற்பத்தி நிலையங்களை கைவிட வேண்டும். இது சர்வதேச கண்காணிப்பில் நடக்கும்.
  • ஹமாஸ் அரசில் இடம் இல்லை: ஹமாஸ் காசா அரசில் எந்தப் பதவியும் வகிக்காது.
  • பிணையாளர்கள் பரிமாற்றம்: ஹமாஸ், உயிருடன்/இறந்த 48 இஸ்ரேலிய பிணையாளர்களை 72 மணி நேரத்தில் விடுவிக்க வேண்டும். பதிலுக்கு, இஸ்ரேல் 250 ஆயுள் தண்டனை பாலஸ்தீனியர்கள், 1,700 கைதிகளை (பெண்கள், குழந்தைகள் உட்பட) விடுவிக்கும். இறந்த பிணையாளர்களுக்கு, 15 பாலஸ்தீனியர்கள் உடல்கள் திருப்பியளிக்கப்படும்.
  • மன்னிப்பு, வெளியேற்றம்: அமைதி உறுதியளிக்கும் ஹமாஸ் உறுப்பினர்களுக்கு காசாவில் மன்னிப்பு. வெளியேற விரும்பினால், பாதுகாப்பான பயணம்.
  • இடைக்கால நிர்வாகம்: போர் முடிவில், அரசியல் சார்பற்ற பாலஸ்தீன குழு (நிபுணர்கள், சர்வதேச உதவியுடன்) காசாவை நிர்வகிக்கும். பொது சேவைகள், நகராட்சி பணிகளை கவனிக்கும்.
  • அமைதி வாரியம்: சர்வதேச அமைப்பு 'அமைதி வாரியம்' கண்காணிப்பு. டிரம்ப் தலைமை. டோனி பிளேர் போன்ற தலைவர்கள் இடம் பெறலாம். இது புனரமைப்பு நிதி, கட்டமைப்புகளை நிர்வகிக்கும்.
  • பாலஸ்தீன அதிகார சபை: சீர்திருத்தம் செய்த பின் காசா கட்டுப்பாட்டை எடுக்கும். காலக்கெடு இல்லை.
  • போர் நிறுத்தம்: உடனடி போர் நிறுத்தம். இஸ்ரேல் படைகள் கட்டுகட்டாக வாபஸ். உதவிகள் உடனடி அனுப்பல் (நீர், மின்சாரம், மருத்துவம்).

இத்திட்டம், ஹமாஸை அகற்றி, சர்வதேச மேற்பார்வையில் நிர்வாகம் அமைத்து, இறுதியில் பாலஸ்தீனத்திடம் ஒப்படைக்கும்.

போரில் காசா மக்கள் தவிக்க, ஐ.நா., ஐரோப்பிய நாடுகள் போர் நிறுத்தம் கோருகின்றன. பல நாடுகள் பாலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரித்துள்ளன. டிரம்பின் திட்டம், இந்த அழுத்தத்தின் பகுதியாக உள்ளது.

ஹமாஸ் ஏற்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. டிரம்ப், "இது உலக அமைதிக்கு பெரிய அடி" என்று கூறினார். இஸ்ரேல், "ஹமாஸ் அழிவுக்கு இது வாய்ப்பு" என்று ஆதரவு. போர் நிறுத்தம் ஏற்பட்டால், காசா புனரமைப்பு தொடங்கலாம்.

இதையும் படிங்க: காசா மக்களுக்கு சற்றே ஆறுதல்! ட்ரம்ப் நிபந்தனைகளுக்கு தலை ஆட்டிய இஸ்ரேல்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share