அமெரிக்காவின் அடுத்த டார்கெட் வடகொரியா?! கிம் ஜாங் உன்-னை குறிவைக்கும் டிரம்ப்!! அதிகரிக்கும் பதற்றம்!
டிரம்ப் ஈரானை அழித்தாலும், வடகொரியாவை தொட முடியாது என்ற கருத்துகள் பரவலாக பகிரப்படுகின்றன.
மேற்காசியாவில் ஈரான் மீது இஸ்ரேலும் அமெரிக்காவும் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், போர் விரைவில் முடிவடையும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உறுதியளித்துள்ளார். இதனால் கச்சா எண்ணெய் விலை விரைவில் குறையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆனால் சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோக்கள் மற்றும் பதிவுகள், "அமெரிக்கா ஈரான் போன்ற நாடுகளை மட்டுமே தாக்க முடியும், வடகொரியாவை டிரம்பால் தொட முடியாது" என்று விமர்சித்து வருகின்றன. இது டிரம்பை தூண்டும் வகையில் இருப்பதால், வடகொரியா அடுத்த இலக்காக இருக்கலாம் என்ற ஊகங்கள் எழுந்துள்ளன.
ஈரான் போரின் முதல் நாளிலேயே உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். பதிலடியாக ஈரான், அமெரிக்காவின் நட்பு நாடுகளான சவுதி அரேபியா, பஹ்ரைன், கத்தார், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்டவற்றை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது.
இதையும் படிங்க: ஈரான் போரை எப்போ முடிக்கலாம்?! இஸ்ரேல் பிரதமர், அமெரிக்க அதிபர் பேச்சு?! வருமா போர்நிறுத்தம்?!
இதனால் போர் நீடிக்கும் என்ற அச்சம் நிலவுகிறது. இந்த சூழலில் சமூக ஊடகங்களில் கிம் ஜாங் உன் தொடர்பான பழைய வீடியோக்களும், புதிய விமர்சனங்களும் வைரலாகி வருகின்றன. "டிரம்ப் ஈரானை அழித்தாலும், வடகொரியாவை தொட முடியாது" என்ற கருத்துகள் பரவலாக பகிரப்படுகின்றன.
வடகொரியா ஏற்கனவே அமெரிக்க மிரட்டல்களால் அணு ஆயுதங்கள், சக்திவாய்ந்த ஏவுகணைகளை உருவாக்கி தயார் நிலையில் வைத்துள்ளது. தென்கொரியா, ஜப்பான் எல்லைகளில் அடிக்கடி ஏவுகணை சோதனைகள் நடத்தி வருகிறது.
டிரம்ப் தனது புதிய யுக்தியால் எதிரி நாடுகளை அழித்து வரும் நிலையில், வெனிசுலா, ஈரானை தொடர்ந்து கிம் ஜாங் உன் அடுத்த டார்கெட் ஆகலாம் என்று சில ஆய்வாளர்கள் கூறுகின்றனர். உலகின் சக்தி வாய்ந்த தலைவராக மாற வேண்டும் என்ற ஆசையுடன் டிரம்ப், தனக்கு பணியாத நாடுகள் மீது தாக்குதல், அதிக வரி விதிப்பு போன்றவற்றை செய்து வருகிறார்.
ஆனால் சர்வதேச அரசியல் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்: வடகொரியாவை தொட்டால் அது பெரிய போராக மாறும். வடகொரியாவின் அணு ஆயுதங்கள், சீனா-ரஷ்யா ஆதரவு ஆகியவை அமெரிக்காவுக்கு பெரும் சவாலாக இருக்கும்.
ஈரான் போரால் வடகொரியா தனது அணு ஆயுதங்களை மேலும் வலுப்படுத்தி, அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கு தயாராக இல்லை என்ற நிலைப்பாட்டை எடுத்துள்ளது. டிரம்ப் ஈரான் போரை விரைவில் முடித்து எண்ணெய் விலையை குறைக்க விரும்பினாலும், வடகொரியா பிரச்சினை உலக பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.
இதையும் படிங்க: 20 மடங்கு அதிக தாக்குதலை தொடுப்போம்!! இதுவரை பாக்காத பயங்கரம்!! ஈரானை எச்சரிக்கும் ட்ரம்ப்!!